தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 9 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று புதன் கிழமை(23) மாலை கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர் வரும் 06 ஆம் திகதி (06-08-2026) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து நேற்று புதன்கிழமை(22) காலை மீன் பிடிக்க இழுவைப் படகு ஒன்றில் 9 மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில் நேற்று புதன்கிழமை (22) மாலை இலங்கை கடற்பரப்பில் நுழைந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
-கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களை விசாரணைகளின் பின்னர் இன்று வியாழக்கிழமை(23) காலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை இன்றைய தினம் வியாழக்கிழமை (23) மதியம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த மீனவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
Reviewed by Vijithan
on
July 23, 2026
Rating:

.jpeg)

.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)

No comments:
Post a Comment