அண்மைய செய்திகள்

recent
-

லஞ்சம் வாங்கிய நானாட்டன் காணி வெளிக்களப்போதனாசிரியர் சதாசிவம் அகிலன் வசமாக மாட்டிக்கொண்டார்

லஞ்சம் வாங்கிய மன்னார் நானாட்டன் காணி வெளிக்களப்போதனாசிரியர் சதாசிவம் அகிலன் வசமாக மாட்டிக்கொண்டார் 


மன்னார் மாவட்டத்தில் நானாட்டன் பிரதேச செயலகத்தில் காணி வெளிக்களப்போதனாசிரியராக கடைமையாற்றும் சதாசிவம் அகிலன்தொடர்சியாக லஞ்சம் பெறுவது கடைமை நேரத்தில் மது அருந்துவது மற்றும் இரவுவேளைகளில் பெண்களுக்கு குறுந்தகவல் அனுப்புவது மற்றும் தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்துவது என தனது அதிகார துஷ்பிரயோகத்தை தொடர்ந்துவந்தான்


இந்நிலையில்  வங்காலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவின் ஆனாள்நகர் பகுதியில் பொதுத்தேவைக்கு என ஒதுக்கப்பட்ட காணி ஒன்றை செபமாலை யேசுதாசன் றெவல் என்பவருக்கு வழங்குவதாக கூறி லஞ்சமாக ரூபா 50000/= கேட்டுள்ளார்.இந்நிலையில் வறிய குடும்பத்தை சேர்ந்த யேசுதாசன் ரூபா 50000/=ஐ   தனது நகையை அடைவு வைதது மன்னார் பிரதேச செயலகம் முன்பாக வைத்து அத்துனுஸ் சில்வா என்பவருடன் சென்று 23/06/2020 அன்று வழங்கியுள்ளார்.


மேலும் காணிக்கு லஞ்சமாக பணம் வழங்கியும் காணியை வழங்காத காரணத்தால் கவலையடைந்த றெவல் குறித்த விடயத்தை கடித மூலம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருந்தார்.


இது தொடர்பில் இன்று 18/09/2020 விசாரணைகளை மேற்கொண்ட மாகண காணி ஆணையாளர் திணைக்களத்தின் உதவிக் காணி ஆணையாளர் குறித்து லஞ்ச ம் பெறப்பட்டதை உறுதிப்படுத்தியதோடு சாட்சிகளிடம் இருந்து  சாட்சியங்களையும் ஆதாரங்களையும் சேகரித்ததை  எமது  நியூமன்னார் இணைய தளம் உறுதிப்படுத்திக்கொண்டது.

---

இவர் முன்னாள் அமைச்சர் றிசாட் பதினின்  நெருங்கிய சாக என்பதால் இவருக்கு 2015  ம் ஆண்டு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் இருந்து செட்டிகுள பிரதேச செயலத்துக்கு வழங்கப்பட்ட இடமாற்றம்   உடனடியாக இரத்து செய்யப்பட்டு நானாட்டன்  செயலகத்து தற்காலிகமாக இணைப்பு செய்யப்பட்டு பின்னனர் அதே நிலையத்துக்கு நிரந்தரமாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது 

----------------------------------------------

நானாட்டன் காணி வெளிக்களப்போதனாசிரியர் இக்னேஸ் அகிலனின் அதிகார துஷ்பிரயோகங்கள்- தொடர்ச்சி

http://www.newmannar.lk/2020/09/NEWS_19.html


லஞ்சம் வாங்கிய நானாட்டன் காணி வெளிக்களப்போதனாசிரியர் சதாசிவம் அகிலன் வசமாக மாட்டிக்கொண்டார் Reviewed by Admin on September 18, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.