தேசிய கால்பந்தாட்ட அணி வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் உடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரோடு நல்லடக்கம்.
பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் பனங்கட்டுக் கொட்டில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு பூதவுடல் எடுத்து வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
-இன்று திங்கட்கிழமை (7) மதியம் 1 மணியளவில் இறுதி அஞ்சலி நிகழ்வு அன்னாரது இல்லத்தில் இடம்பெற்றது.
இதன் போது மதத்தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உப தவிசாளர்கள்,உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள், விளையாட்டுக்கழக வீரர்கள், தேசிய கால்பந்தாட்ட அணி பிரதிநிதிகள்,இளைஞர் கழக அங்கத்தவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,வர்த்தகர்கள்,முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பல ஆயிரக்கணக்கானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாலை 2.45 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து பூதவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பூதவுடல் ஊர்வலமாக மன்னார் பொது சேமக்காலை க்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணியளவில் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதி நல்லடக்கத்தையொட்டி இன்றைய தினம் திங்கட்கிழமை(7) மன்னார் பஜார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு துக்க நாள் அனுஸ்ரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய கால்பந்தாட்ட அணி வீரர் டக்ஸன் பியூஸ்லஸின் உடல் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீரோடு நல்லடக்கம்.
Reviewed by Author
on
March 07, 2022
Rating:

No comments:
Post a Comment