அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 35 பேர் பாணந்துறையில் கைது

கடல் வழியாக அவுஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 35 பேர் கொண்ட மற்றுமொரு குழுவை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். பாணந்துறை கடற்பரப்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த குழுவினர் பயன்படுத்திய பலநாள் மீன்பிடி இழுவைப் படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

 இந்தக் குழுவில் இந்த மோசடியில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்கள், நான்கு பெண்கள் மற்றும் ஆறு குழந்தைகள் உட்பட 25 ஆண்கள் அடங்குகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கல்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 06 முதல் 56 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. குறித்த குழுவினர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 35 பேர் பாணந்துறையில் கைது Reviewed by Author on June 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.