அண்மைய செய்திகள்

recent
-

மத்திய கிழக்கு போரால் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த அலுமினியம் விலை

 மத்திய கிழக்கு போரால் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு அலுமினியம் விலை அதிகரித்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.


ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கின் முக்கிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களினால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.



 4.7 சதவீதம் அதிகரித்து,  மெற்றிக் தொன் 3,453 டொலர்


அலுமினியத்தின் விலை 4.7 சதவீதம் அதிகரித்து, ஒரு மெற்றிக் தொன் 3,453 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் இது 3,492 டொலர் வரையிலும் அதிகரித்தது.


இதற்கு முன்னர் 2022 மார்ச் மாதம் ரஷ்யா - உக்ரேன் போரின் போது ஒரு தொன் அலுமினியம் 4,073.50 டொலர் என்ற உச்சத்தைத் தொட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அலுமினியத்தைத் தொடர்ந்து செம்பு ஒரு தொன் 12,231 டொலராகவும், துத்தநாகம் 3,168 டொலராகவும் விலை அதிகரித்துள்ளன.




மத்திய கிழக்கின் இரு பெரும் உற்பத்தி நிறுவனங்கள் ஈரானின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான பஹ்ரைனிலுள்ள அல்பா நிறுவனம் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகிறது.


ஏற்கனவே தனது உற்பத்தித் திறனில் 19 சதவீதத்தை மூடுவதாக அல்பா நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம், தனது ஆலை சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.




ஈரான் - இஸ்ரேல் போரினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கான அலுமினிய ஏற்றுமதியை முடக்கியுள்ளது.


லண்டன் உலோகச் சந்தையின் களஞ்சியங்களில் உள்ள அலுமினிய கையிருப்பு கடந்த மே மாதத்திலிருந்து 60 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளதால், சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.


உலகின் மிகப்பெரிய நுகர்வு நாடான சீனாவில் தொழிற்சாலை நடவடிக்கைகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், அலுமினியத்திற்கான தேவை அதிகரித்துள்ளது.




போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் பொதியிடல் துறைகளில் அலுமினியம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், இந்த விலை அதிகரிப்பு சர்வதேச ரீதியில் பல பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.





மத்திய கிழக்கு போரால் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகரித்த அலுமினியம் விலை Reviewed by Vijithan on March 31, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.