முசலி பிரதேசத்தில் 400வீடுகளை புனரமைக்க நிதிஉதவி
மன்னார் மாவட்டத்தில் கடந்த கால யுத்தத்தால் சேதமான வீடுகள் புனரமைப்பதற்கான நிதியினை சிறைச்சாலைகள், மற்றும்புனர் வாழ்வு அமைச்சு வழங்கி உள்ளது .
மன்னார் மாவட்டத்தில் மன்னார் மாந்தை, மற்றும் முசலி பிரதேச செயலகப் பிரிவில் வாழும் 400குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.
இக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை சென் சேவியர் ஆண்கள் பாடசாலையில் இடம் பெற்றது .
இதன்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 50000ரூபா வீதம் வழங்கப்பட்டது.சுமார் 2கோடி நிதி இம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்கு முன்னர் ஏற்கனவே 50ஆயிரம் ரூபா வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முசலி பிரதேசத்தில் 400வீடுகளை புனரமைக்க நிதிஉதவி
Reviewed by NEWMANNAR
on
September 21, 2011
Rating:
No comments:
Post a Comment