அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மூர் வீதியில் விபத்து மாணவன் பலி

மன்னார் மூர்வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்துச் சம்பவத்தின் போது 07 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.


உயிரிழந்த சிறுவன் மன்னார் பள்ளிமுனை 49 வீட்டுத்திட்டம் கிராமத்தினைச் சேர்ந்த செபஸ்ரியான் அபிசேக் (வயது-07)என தெரிய வந்துள்ளது. குறித்த சிறுவன் பள்ளிமுனை புனித லூசியா மகா வித்தியாலயத்தில் தரம்-01 இல் கல்வி கற்று வந்துள்ளார்.

சம்பவ தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் மூர்வீதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் குறித்த சிறுவனின் தந்தையான செபஸ்ரியான்  காவலாளியாக கடமையாற்றி வருகின்ற நிலையில்  குறித்த சிறுவன் தந்தையுடன் குறித்த சிறுவனும் அலுவலகம் சென்றுள்ளார். 

பின் மாலை 4.மணியளவில் தந்தை பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து மிக்ஸர் வேண்டுவதற்காக கடைக்குச் சென்றுள்ளார். 

இதன்  போதே மன்னார் மூர்வீதி பிரதான வீதி வழியாக வந்து கொண்டிருந்த வைத்தியர் ஒருவரினால் செலுத்தி வரப்பட்ட பிக்கப் ரக வாகனம் குறித்த சிறுவன் மீது மோதியுள்ளது.

இதன் போது குறித்த சிறுவனின் தலை மற்றும் உடலில்  பலத்த காயங்கள் ஏற்பட்ட  நிலையில் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அவசரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த சிறுவன் உயிரிழந்தார். குறித்த வாகனத்தை செலுத்தி வந்த வைத்தியர் கைது செய்யப்பட்டார்.
  
குறித்த சடலத்தை மன்னார் நீதவான் திருமதி.கே.ஜீவரானி இன்று திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறைக்கு சென்று   பார்வையிட்டதோடு சடலப்பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னார் மூர் வீதியில் விபத்து மாணவன் பலி Reviewed by NEWMANNAR on October 04, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.