மன்னாரில் மருந்துக்கும் இல்லாத தேசிக்காய்
தேசிக்காய்க்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக மன்னார் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மன்னார் நகரச் சந்தையில் ஒரு கிலோ தேசிக்காய் 450 ரூபா – 500 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதுடன், இது கூட ஒரு சில வியாபாரிகளிடம் இருந்து மட்டுமே கிடைக்கின்றது.
இதுவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில், ஒரு கிலோ தேசிக்காய் 20 ரூபா – 25 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டதுடன், அப்போது தேசிக்காய் தேடுவாரற்றும் காணப்பட்ட நிலையில், தற்போது மருந்துக்கும் இல்லாது போய்விட்டதாக மன்னார் மக்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் தேசிக்காயின் நிரம்பல் குறைவாக உள்ளமையினால் இதன் விலை உயர்வாக காணப்படுகின்றது. பொருத்தமான பருவம் தற்போது இல்லாமையினால் தேசிக்காயினை உற்பத்தி செய்து சந்தையில் நிரம்பல் செய்ய முடியாது உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் நிலமை இவ்வாறு இருக்க, கடந்த வாரம் ஒரு கிலோ தேசிக்காய் யாழ்ப்பாணத்தில் ரூ.160 - ரூ.180 ஆகவும் வவுணியாவில் ரூ.200 – ரூ.250 ஆகவும் கிளிநொச்சியில் ரூ.220 - ரூ.240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டதாககமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவகம் (HARTI) தெரிவித்துள்ளது.
இதேவேளை, தேசிக்காயின் ஆகக் கூடுதலான விலை கொழும்பிலும் (ரூ.500/Kg) ஆகக் குறைவான விலை மாத்தரவிலும் (ரூ.170/Kg) விற்பனை செய்யப்பட்டதாக கமத்தொழில் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவகம் (HARTI)மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(என்.சிவரூபன்)
மன்னாரில் மருந்துக்கும் இல்லாத தேசிக்காய்
Reviewed by NEWMANNAR
on
October 13, 2011
Rating:

No comments:
Post a Comment