மன்னாரில் போதைப் பொருளுடன் கைதான நால்வரும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு தலைமன்னாரில் பதுக்கி வைத்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 1,500 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பில் கைதான ஒரு பெண் உட்பட நான்கு பேரையும் மன்னார் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 பேரையும் தலைமன்னார் பொலிஸார் கடந்த புதன்கிழமை மாலை மன்னார் நீதிவான் திருமதி கே.ஜீவராணி முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது குறித்த பெண் மீது வீட்டில் 1கிலோ 350 கிராம் 440 மில்லி கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த தாகவும்,குறித்த 3 நபர்களும் ஓட்டோவில் 57 கிராம்,450 மில்லி கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் பதுக்கி வைத்திருந்த தாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்த நிலையில் மன்னார் நீதிவான் முன்னிலை யில் முன்னிலைப்படுத்தினர்.இதன் போது குறித்த நான்கு நபர்களையும் மேலும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட் படுத்த வேண்டும் என நீதிவானி டம் தலைமன்னார் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து குறித்த 4 பேரையும் தலைமன்னார் பொலிஸில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ளு மாறும் குறித்த நான்கு பேரை யும் இன்று மன்னார் நீதிமன் றத்தில் முன்னிலைப் படுத்துமாறும் மன்னார் நீதிவான் திருமதி.கே. ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் எழுத்தூரைச் சேர்ந்த ஏ.என்.ராஜன் மோசஸ்,மன்னார் மூர்வீதியைச் சேர்ந்த முகமட் குளாம் நஸ்சான்,மன்னார் பள்ளி முனையைச் சேர்ந்த பிரகொரி பிகிராடோ அன்ரன் சிறில் மற்றும் தலைமன்னார் கிராமத் தைச் சேர்ந்த சாந்தி சேவியர் டெனிஸ்டா ஜீவதி ஆகிய நான்கு பேருமே கைது செய்யப்பட்டு தற்போது மன்னார் நீதிவானின் உத்தரவிற்கமைவாக தலைமன்னார் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தலைமன்னார் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி சேவியர் டெனி ஸ்டா ஜீவதி எனும் குடும்பப் பெண் ஒரு மாதக்குழந்தையின் தாய் என தெரியவந்துள்ளது.சம்பவ தினம் இவரது கணவன் தப்பிச்சென்றுள்ளார். மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் போதைப் பொருளுடன் கைதான நால்வரும் தொடர்ந்து தடுத்து வைத்து விசாரணை
Reviewed by NEWMANNAR
on
October 31, 2011
Rating:

No comments:
Post a Comment