மன்னார் நகரசபைக்கு தகுதியில்லாத செயலரை நியமிக்க அரசியல்வாதிகள் முயற்சி
மன்னார் நகரசபை செயலாளராக நியமிப்பதற்கு சில அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளினால் நியமிக்கப்பட்டு அதிகாரிகளாக்கப்பட்டவர்களும் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபைக்கு தெரிவுசெய்யப்படவுள்ள புதிய செயலாளரை தகுதி வாய்ந்;த ஒருவராக தெரிவு செய்ய வேண்டும் என்று உரிய தரப்பினரிடம், மன்னார் நகரசபை கோரிக்கை விடுத்துள்ளதாக நகரசபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
'மன்னார் நகரசபையின் செயலாளராக கடமையாற்றி வந்த திருமதி பேனாட் குரூஸ் கடந்த 06-03௨013 அன்று ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மன்னார் நகரசபைக்கு புதிய செயலாளர் ஒருவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறு நியமிக்கப்படுகின்ற செயலாளர் தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று உரிய தரப்பினரிடம், மன்னார் நகரசபை கோரிக்கை விடுத்துள்ளது.
நகரசபை செயலாளருக்கான பதவி நிலை இலங்கை நிர்வாக சேவை தரம் 03 இற்கு உரியதாகும். ஆகவே, பிரதேச சபைகளில் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் தரம், பதவி நிலை குறைந்தவர்களை மன்னார் நகரசபை செயலாளராக நியமிப்பதற்கு சில அரசியல்வாதிகளும் அரசியல்வாதிகளினால் அதிகாரிகளாக்கப்பட்டவர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த அடிப்படையில் தகுதிவாய்ந்த இலங்கை நிர்வாக சேவை தரம் - 03 இற்குரிய ஒருவரை நியமிக்குமாறும் அல்லது அதி விசேட தகைமையுடையவரை நியமிக்குமாறும் மன்னார் நகரசபை உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கை அடங்கிய அவசர கடிதத்தினை மன்னார் நகரசபையின் உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் கையொப்பமிட்டு வடமாகாண உதவி உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பி வைத்துள்ளார். ஷ
இவற்றை கருத்தில் கொண்டு செயலாளரை நியமிக்க வேண்டும் என மன்னார் நகர சபை கோரிக்கை விடுத்துள்ளது' என்றார்.
மன்னார் நகரசபைக்கு தகுதியில்லாத செயலரை நியமிக்க அரசியல்வாதிகள் முயற்சி
Reviewed by Admin
on
March 19, 2013
Rating:

No comments:
Post a Comment