அண்மைய செய்திகள்

recent
-

ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து:இந்திய , இலங்கை அரசுகள் முடிவு!

ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்க, இரு நாட்டு அரசுகளும் முடிவு செய்து உள்ளன என தென் இந்தியாவிற்கான இலங்கை தூதரக துணை உயர் கமிஷனர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.


கீழக்கரையில் நடந்த விழாவில் பங்கேற்ற இவர் கூறியதாவது:

இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு பின் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறான தகவல். இலங்கை ராணுவ மையத்தில் இந்து கோயில் உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இரண்டு முறை திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

 ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து தொடக்க, இரு நாட்டு அரசுகளும் முடிவு செய்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கடந்த காலங்களில் இலங்கை திரிகோணமலையில் அமெரிக்காவின் படைத்தளம் அமைக்க, இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததால் இலங்கை அரசும், அதை ஏற்று அனுமதி அளிக்கவில்லை. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பாரம்பரிய உறவு இருந்து வந்து உள்ளது என்றார்.
ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து:இந்திய , இலங்கை அரசுகள் முடிவு! Reviewed by Admin on June 08, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.