மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் விபத்து: இளைஞர் படுகாயம்

மதவாச்சி பிரதான வீதியூடாக மன்னாரை நோக்கி சென்றுக்கொண்டிருந்த டிப்பர் வாகனமும் முருங்கன் வீதியூடாக மதவாச்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் தம்பனைக்குளம் 56 ஆவது மைல்கல் தொலைவில் மோதிகொண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில்; முச்சக்கர வண்டி அருகிள் உள்ள பற்றைக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற அவிசாவளையைச் சேர்ந்த அமித்பண்டார (வயது-24) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர், முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டிப்பர் வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் நிருபர்
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் விபத்து: இளைஞர் படுகாயம்
Reviewed by NEWMANNAR
on
June 08, 2013
Rating:

No comments:
Post a Comment