யாழ்ப்பாணம் கட்டைக்காடு சுண்டிக்குளம் கடற்பரப்பில் பாஸ் வழங்கப்படாதவர்கள் அட்டை,சங்கு பிடிப்பதாக மக்கள் விசனம்.
யாழ்ப்பாணம் கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளரினால் யாழப்பாணம் கட்டைக்காடு சுண்டிக்குளம் கடற்பரப்பில் அட்டை மற்றும் சங்கு ஆகியவற்றை பிடிப்பதற்கு தொழிலாளர்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது.குறித்த பாஸ் மட்டுப்படுத்தப்பட்ட அளவே வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அட்டை,சங்கு பிடிப்பதற்கான பாஸ் எவையும் இன்றி யாழ்ப்பாணம் கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளரின் ஆதரவோடு அட்டை சங்கு பிடிப்பதில் ஈடுபட்டு வருவதாக கட்டைக்காடு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே பாஸ் வழங்கப்படாத தென்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களை அட்டை,சங்கு பிடிப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என கட்டைக்காடு கிராம மக்கள் யாழ்ப்பாணம் கடற்தொழில் திணைக்கள உதவி பணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கட்டைக்காடு சுண்டிக்குளம் கடற்பரப்பில் பாஸ் வழங்கப்படாதவர்கள் அட்டை,சங்கு பிடிப்பதாக மக்கள் விசனம்.
Reviewed by Admin
on
June 09, 2013
Rating:

No comments:
Post a Comment