அண்மைய செய்திகள்

recent
-

ஆயிரம் வருடம் பழைமை வாய்ந்த மன்னார் கழுதைகளை பராமரிப்பதே எமது நோக்கம்- இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவர் ரமேஸ் குமார்.

மன்னாரில் உள்ள கழுதைகளின் பராமரிப்புக்கள் மற்றும் அதனை பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை மேற்கொள்ளுவதற்காகவே தாம் மன்னாருக்கு வருகை தந்துள்ளதாக இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவர் ,கால்நடை இணைப்பாளருமான வைத்தியர் ரமேஸ் குமார் தெரிவித்தார்.



இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

மன்னார் நகர சபையும்,டயஸ் போரா லங்கா அமைப்பும் இணைந்து மன்னாரில் உள்ள கழுதைகளின் பராமரிப்புக்கள் தொடர்பாக ஒரு பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த கழுதைகளை பராமரித்தல் உற்பட சகல ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள அவர்கள் எங்களை அழைத்துள்ளனர்.

நாங்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் இங்கு வந்தோம்.இங்குள்ள அனைவரிடமும் இவ்விடயம் தொடர்பில் ஆலோசனைகளை பெற்றோம்.
இங்கிருக்கின்ற கழுதைகளை பாதுகாக்க வேண்டிய நிலையை ஏற்பட்டிருப்பதினால் அதனை எப்படி பாதுகாக்க வேண்டும் என்ற முறைமைகளை ஆலோசனை செய்து ,அதனை எவ்வாறு நடைமுறையில் கொண்டு வருவது தொடர்பாக மன்னாரில் கழுதைகள் பாதுகாப்பு காப்பகம் ஒன்றை உருவாக்கியுள்ளோம்.

இதில் நிர்வாக உறுப்பினர்களாக வைத்தியர்கள் உற்பட பலர் தம்மை பதிவு செய்துள்ளனர்.

முதலில் மன்னார் மக்கள் கழுதைகள் மூலம் பல துன்பங்கள் தமக்கு ஏற்படுவதாகவும்,குறிப்பாக விபத்துக்கள் ஏற்படுவதாகவும் இதனால் கழுதைகள் வேண்டாம் என கூறியிருந்தார்கள். இது தொடர்பாக நாங்கள் இந்த மக்களுக்கு தெளிவான அறிவுரைகளை வழங்கினோம்.
தற்போது கால்நடை வைத்தியர்கள் சிலர் அழைக்கப்பட்டு கழுதைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பாக அவர்களுக்கு நாங்கள் பயிற்சிகள் வழங்கினோம்.

எங்களுடைய கணக்கெடுப்பின் படி மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 375 கழுதைகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளோம்.அவற்றில் பெண் மற்றும் குட்டி கழுதைகளே  அதிகமாக காணப்படுகின்றது.

அதிகரித்து வரும் கழுதைகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடையினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

தற்போது கழுதைகளின் முக்கியத்துவம் தொடர்பாக கிராம மக்கள் பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்களுக்கு விழிர்ப்புனர்வுகளை வழங்கி வருகின்றோம்.

மன்னார் மக்கள் கழுதைகளை பயன்படுத்தி பயனடையக்கூடிய வகையில் நாங்கள் செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மன்னார் கழுதைகளை பாதுகாத்து பராமரிப்பதே எமது நோக்கமாக இருப்பதாக இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவர் ,கால்நடை இணைப்பாளருமான வைத்தியர் ரமேஸ் குமார் மேலும் தெரிவித்தார்.
ஆயிரம் வருடம் பழைமை வாய்ந்த மன்னார் கழுதைகளை பராமரிப்பதே எமது நோக்கம்- இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவர் ரமேஸ் குமார். Reviewed by NEWMANNAR on June 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.