அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் கடலினுள் பாய்ந்தது.

மன்னார் நகரில் இருந்து பிரதான பாலம் வழியாக சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை கட்டுப்பாட்டை இழந்து பாலத்தினுள் பாய்ந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.


மடு தொடக்கம் தலை மன்னார் வரைக்குமான புகையிரத பாதை அமைக்கும் பணிகள் தற்போது மிக வேகமாக இடம் பெற்று வருகின்றது.இந்த நிலையில் தனியார் டிப்பர் வாகனங்கள் பல கடமைக்காக அமர்த்தப்பட்டுள்ளது.

நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான டிப்பர் வாகனம் மணல் மண் மற்றும் கொங்கிரீட் கற்களை ஏற்றிக்கொண்டு மன்னார் வந்து செல்வது வழமை.
இந்த நிலையில் நேற்று மாலை புகையிரத பாதை வேலைக்காக மன்னாருக்கு பொருட்களை ஏற்றி வந்த டிப்பர் வாகனம் பொருட்களை இறக்கி விட்டு மன்னார் பிரதான பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது மன்னார் பிரதான பாலத்தில் இருந்து சுமார் 200 மீற்றர் தொலைவில் குறித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்தின் அருகில் பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த 6 கொங்கிரீட் தூண்களை உடைத்துக்கொண்டு கடலினுள் பாய்ந்துள்ளது.

குறித்த டிப்பர் வாகனம் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ள போதும் அதில் பயணித்த எவருக்கும் எந்த சேதங்களும் ஏற்படவில்லை.மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







மன்னார் பிரதான பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் கடலினுள் பாய்ந்தது. Reviewed by NEWMANNAR on June 11, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.