யாழில் முதல் தடவையாக மோட்டார் கார், மோட்டார் சைக்கிள் போட்டி
குறித்த போட்டி தொடர்பாக கார்ஸ்டன மோட்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் டிணேஸ் ஜெயவர்த்தனா கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் தற்போது நடைபெறவுள்ள மோட்டார் கார் பந்தயம் மற்றும் மோட்டார் சையிக்கிள் ஓட்டப் போட்டிகள் என்பன முதல் கட்டமாக நடைபெறுவதாகவும் இதில் கிடைக்கும் அனுபவங்கள் ஆதரவைப் பொறுத்து எதிர் காலத்தில் சர்வதேச மட்டத்திலான கார் பந்தயப் போட்டிகள் மற்றும் மோட்டார் சையிக்கிள் போட்டிகளையும் நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த போட்டிகள் எதிர் வரும் 13 ம் 14 ம் 15 ம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது எனவும் தொவித்துள்ளார்.
குறித்த போட்டியில் புதியவர்களும் இணைந்து கொள்ள முடியும். இவ்வாறான போட்டிகளினால் பிராந்தியத்தில் பெர்ருளாதார மற்றும் சுற்றுலாத்துறை மேம்படுத்த உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழில் முதல் தடவையாக மோட்டார் கார், மோட்டார் சைக்கிள் போட்டி
Reviewed by Admin
on
August 18, 2013
Rating:

No comments:
Post a Comment