முசலியில் சிங்கள குடியேற்றத்தை கண்டிக்கின்றோம்-முசலி பிரதேச பிரஜைகள் குழு.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் காணப்படும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் முசலி பிரதேச செயலாளர் பிரிவானது முஸ்லிம் தமிழ் மக்களை மையமாக கொண்டு 2 இன மக்களும் பல ஆண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள்.
ஆனாலும் 1990 ம் ஆண்டுகாலப்பகுதியில் ஏற்பட்டஅசாதாரணநிலையின் காரணமாக முஸ்லிம் மக்கள் தங்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவர்கள் கல்பிட்டி மற்றும் புத்தளம் ஆகிய பகுதிக்குச் சென்றார்கள்.
அதன் பிற்பாடு 2007ம் ஆண்டு யுத்தத்தின் காரணமாக தங்களின் உயிரினை பாதுகாக்கும் நோக்குடன் முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சகல மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
அதன் பிற்பாடு 2009ம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்து விட்டது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் இருந்து கொண்டு பார்க்கும் போது முசலி பிரதேசத்தில் சகல கிராமமக்களும் இன்னமும் மக்களின் சொந்த கிராமத்தில் சென்று தங்களின் பூர்விகமான காணியில் குடியமர்த்தப்படாமலும் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான காணிகள் கூட இன்னமும் சரியான முறையில் கொடுக்கப்படாமல் மக்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கும் நிலையினை எமது முசலி பிரதேச பிரஜைகள் குழு அவதானித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தற்போது வடமாகாண தேர்தலை நடாத்துவதற்கான சகலவிதமான ஏற்பாடுகளும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற இக்காலக்கட்டத்தில் புதிதாக முசலி பிரதேசத்தில் சிங்கள் மக்களை கொண்டு அரசாங்கம் சிறப்பு மீள்குடியேற்றத்திட்டம் என்ற பெயரில் 500 குடும்பங்களை வருகின்ற கிழமைக்குள் சுத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் அதாவது காயாக்குழிக்கும் கொண்டச்சிக்குடாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் கொண்டு குடியமர்த்துவதற்காக மன்னார் மாவட்ட அரச அதிபரும் 542 படைப்பிரிவினரும் இணைந்து இந்த சிங்களமக்களை கொண்டு குடியேற்றுகின்ற திட்டத்திற்கும் மற்றும் முசலி பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்வதற்கு முற்பட்டதனையும் முசலி பிரதேச பிரஜைகள் குழுவும் முசலி வாழ் மக்களும் கடும் கண்டனத்தினை தெரிவித்து நிற்கின்றோம்.
இது மட்டுமன்றி 18-07-2013 அன்று மன்னார் அரசாங்க அதிபரினால் முசலி பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரகாரம் சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கான 7 விடயங்களை உடனடியாக செய்யப் பட வேண்டு எனவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சிங்கள மக்கள் போரால் பாதிக்கப்பட்டவர்களோ?அல்லது இடம்பெயர்ந்தவர்களோ? என்பதனை தென்னிலங்கை பிரதிநிதிகள் ஊடாக அறியக்குடியதாக உள்ளது.
இத்துடன் இவர்கள் பூர்வீகமாகவாழ்ந்தவர்களா? ஏன எண்ணும் போது முதல் தடவையக முசலி பிரதேசத்தில் கால் பதித்தவர்களாக காணப்படுகின்றார்கள்.
இவர்கள் எப்படியாயினும் முசலி பிரதேசத்தில் வந்து குடியமர்வதற்கு எந்த விதத்திலும் தகுதி அற்றவர்கள் . ஆனாலும் குறுகிய காலப்பகுதியில் முசலி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பதிவுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த விடயத்தினையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ் விடயம் முசலி வாழ் தமிழ் , முஸ்லிம் மக்களிடத்தில் கவலையினை உண்டு பண்ணியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளே
இவ் விடயத்தில் சரியானதொரு முடிவினை எடுக்க வேண்டிய தேவைப்பாடு மக்களை விட உங்களிடத்திலேயே கூடுதலாக காணப்படுகின்றது.
எனவே மக்களின் நிலையினைகருத்தில் கொண்டு இவ்வாறான பிழையானதொரு செயற்பாட்டை நிறுத்தும் படியாகவும் இவ் செயற்பாட்டினை உடன் நிறுத்துவதற்கு அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்கள் முன் வந்து இச் செயற்பாட்டை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு தாம் கேட்டுக்கொள்ளுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
முசலியில் சிங்கள குடியேற்றத்தை கண்டிக்கின்றோம்-முசலி பிரதேச பிரஜைகள் குழு.
Reviewed by Admin
on
August 18, 2013
Rating:
Reviewed by Admin
on
August 18, 2013
Rating:



No comments:
Post a Comment