அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்.-படங்கள்




(1)எஸ்.பிரிமூஸ் சிறாய்வா

மன்னார் மாவட்டத்தின் பிரபல சட்டத்தரணியான எஸ்.பிரிமூஸ் சிறாய்வா என்பவர் வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக இலக்கம்-01 இல் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

மன்னார் பேசாலையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு இடம் பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு சிறிய வாக்குகளினால் ஆசனத்தை இழந்தார்.


(2)ஜனாப் அயூப் அஸ்மிம்(முஸ்லிம் வேட்பாளர்)

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையிலான முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பின் உறுப்பினரான ஜனாப் அயூப் அஸ்மிம் என்பவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக இலக்கம்-02 இல் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும் என்ற நோக்கத்திற்காக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பாக இவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.



(3)இ.சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார் மாவட்டத்தின் வர்த்தகரான இ.சாள்ஸ் நிர்மலநாதன் என்பவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இலக்கம் -3 இல் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

மன்னாரைச் சேர்ந்த இவர் தொழில் அதிபராக உள்ள நிலையில் சமூக சேவையிலும்,பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.



(4)ஒஸ்பிஸ் யூட் ஆனந்தம் குரூஸ்

மன்னார் மாவட்டத்தின் பிரபல ஆசிரியரும்,மன்-வங்காலை புனித ஆனால் ம.ம.வி பாடசாலையின் உப அதிபருமான  ஒஸ்பிஸ் யூட் ஆனந்தம் குரூஸ் என்பவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இலக்கம் 4 இல் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னால் மாணவர் ஒன்றியத்தலைவராகவும் கடமையாற்றிய இவர் ஏழை மாணவ சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து வந்த இவர் தற்போது பல்வேறு சமூகப்பணியிலும் ஈடுபட்டு வருகின்றார்.



(5)கி.விமலசேகரம்

மன்னார் மாவட்டத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றிய கி.விமலசேகரம் என்பவர் வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக இலக்கம் 5 இல் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

இவர் முசலி,மடு ,மாந்தை மேற்கு பிரதேச செயலகங்களின் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி தற்போது மன்னார் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றி வந்தார்.

இந்த நிலையில் தற்போது வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வலுச் சேர்க்கும் முகமாக இவர் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.



(6)வைத்தியகலாநிதி என்.குனசீலன்

-மன்னார் மாவட்டத்தின் மடு,மாந்தை மேற்கு,மன்னார் சுகாதார வைத்திய அதிகாரியாகவும்,மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு வைத்தியராகவும் கடமையாற்றிய வைத்திய கலாநிதி ஜீ.குனசீலன் என்பவர் வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட முதன்மை வேட்பாளராக இலக்கம் 06 இல் போட்டியிடுகின்றார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ஜீ.குனசீலன் என்பவர் தனது அரச பதவியை இராஜீனாமா செய்துள்ள நிலையில் மக்களுக்கு அரசியல் ரீதியாக சேவையாற்றுவதற்காக பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் இத்தேர்தலில் போட்டியிடுகின்றார்.



(7)சட்டத்தரணி பாலசுப்பிரமணியம் டெனிஸ்

மன்னார் மாவட்டத்தின் பிரபல சட்டத்தரணியான பாலசுப்பிரமணியம் டெனிஸ் என்பவர் வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக இலக்கம் 07 இல் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

-மன்னாரைச் சேர்ந்த சட்டத்தரணியான இவர் பல்வேறு சமூக பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வலுச் சேர்க்கும் முகாமாக இவர் களமிறக்கப்பட்டுள்ளார்.


(8) வி.எஸ்.சிவகரன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச்செயலாளராக கடமையாற்றி வரும் வீ.எஸ்.சிவகரன் என்பவர் வடமாகாண சபைத்தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக இலக்கம் 08 இல் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகின்றார்.

இவர் மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக பொதுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் சமூக அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகிக்கின்றார்.இவர் பிரபல எழுத்தாளராக உள்ளார்.

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம்.-படங்கள் Reviewed by Admin on September 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.