அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலத்தில் உள்ள அதியுயரம் கொண்ட அனைத்து தெரு மின் குமிழ்களும் திருத்தம்-மன்னார் நகர சபை செயலாளர்.படங்கள்

மன்னார் பிரதான பாலத்தில் அமைந்துள்ள அதியுயரம் கொண்ட தெரு மின் விளக்குகள் நீண்ட காலம் பழுதடைந்து ஒளிராத நிலையில் காணப்பட்ட நிலையில் அவை மன்னார் நகர சபையின் பாரிய முயற்சியின் காரணமாக திருத்தப்பட்டு தற்போது குறித்த மின் குமிழ்கள் ஒளிர்வதாக மன்னார் நகர சபையின் செயலாளர் எல்.பிரிட்டோ தெரிவித்தார்.

-இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் பிரதான பாலம் அமைக்கப்பட்ட நாள் முதல் குறித்த மின் விளக்குகள் பாலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் அதியுயரம் கொண்ட 6 மின் விளக்குகள் அமைக்கப்பட்ட நிலையில் தனித்தனியே பழுதடைந்து அனைத்து மின் குமிழ்களும் ஒளிராத நிலையில் காணப்பட்டது.

இதனால் இரவு நேரத்தில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்ததோடு அடிக்கடி விபத்துக்களும் இடம் பெற்று வந்தது.

இந்த நிலையில் மன்னார் நகர சபை தலைவர்,உப தலைவர்,உறுப்பினர்கள் குறித்த மின் குமிழ்களை திருத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வந்த போதும் அதி உயரம் கொண்டதாக காணப்பட்டமையினால் அவற்றை உடனடியாக திருத்தி புனரமைப்பு செய்ய முடியாத நிலையில் காணப்பட்டது.

தொடர்ந்தும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் மன்னார் நகரசபை தமது பணியாளர்களுடன் படிப்படியாக குறித்த அதி உயரம் கொண்ட குறித்த தெரு மின் விளக்குகளில் உள்ள மின் குமிழ்களை மாற்றி தற்போது அவை அனைத்தும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது.

தற்போது இரவு நேரத்தில் குறித்த மின் குமிழ்கள் ஒளிர்வதாகவும்,மக்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி தமது பயணத்தை தொடர்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





மன்னார் பிரதான பாலத்தில் உள்ள அதியுயரம் கொண்ட அனைத்து தெரு மின் குமிழ்களும் திருத்தம்-மன்னார் நகர சபை செயலாளர்.படங்கள் Reviewed by Admin on September 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.