புத்தளத்தில் போஸ்டர் குழப்பம்
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள 03 மாகாணசபைத்தேர்தல்களில் பங்குபற்றும் வேட்பாளர்கள் ஏட்டிக்குப்போட்டியாக தங்களது போஸ்டர்களை எல்லாப்பிரதேசங்களிலும் ஒட்டி யுள்ளார்கள்.

இதில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் மாத்திரம் போஸ்டர்களைப்பார்த்து குழம்பிப்போய் உள்ளார்கள்.
ஏனெனில் வட மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த
மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்சேர்ந்த ஒரு இலட்சம் பேர் வரை இம்மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிதறி வாழ்கிறார்கள்.
வட மாகாண சபைத்தேர்தலும் இம்முறை நடைபெறுவதால் மன்னார் , முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் மாவட்டத்தைச்சேர்ந்த வேட்பாளர்களும் தங்களது போஸ்டர்களை புத்தளம் பகுதி எங்கும் சரமாரியாக ஒட்டியுள்ளனர். பேனர்கள்,கட்டவுட்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.
வட மேல் மாகாண சபைத்தேர்தலும் நடைபெறவுள்ளதால் புத்தளம் மாவட்ட வேட்பாளர்களின் போஸ்டர்கள்,பெனர்கள்,கட்டவுட்டுகள் என எங்கு பார்த்தாலும் தேர்தல் மயமாகவே புத்தளம் காட்சியளிக்கிறது.
இதனால் எந்த வேட்பாளர்,என்ன இலக்கம்,எந்த மாவட்டம் என்பன போன்ற விடயங்களை அறிந்து கொள்வதில் வாக்காளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இம்முறை வட மாகாணத்தைச்சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் புத்தளம் மாவட்டத்தில் வாக்காளர்களாக பதிவு செய்து வாக்களிக்கவுள்ள நிலையில் இவர்களுக்கும் இரு மாகாண சபை வேட்பாளர்களது இலக்கங்கள் கொண்ட தேர்தல் வுpளம்பரங்கள் கிடைத்துள்ளதால் நிலைமை மேலும் சிக்கலாகவுள்ளதாக வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.
( டீ.எம்.நப்ஹான் )

Reviewed by NEWMANNAR
on
September 16, 2013
Rating:

No comments:
Post a Comment