தலைமன்னார் கடற்கரையில் கைது செய்யப்பட்ட 2 பேர் விளக்கமறியலில் வைப்பு.
இந்தியாவிற்கு சட்டவிரோதமாக படகில் செல்வதற்காக இருந்த நிலையிலே சனிக்கிழமை மாலை குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தலைமன்னார் பொலிஸ் நிலைய தலைமையக பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமிம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதன் போதே குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்கரையில் கைது செய்யப்பட்ட 2 பேர் விளக்கமறியலில் வைப்பு.
Reviewed by Admin
on
September 16, 2013
Rating:

No comments:
Post a Comment