மத்தியகிழக்கில் நிர்க்கதி நிலை: 56 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
தொழில்நிமித்தம் மத்தியகிழக்கிற்கு சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 56 இலங்கைப் பயணியாளர்கள் மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் 3 விமானங்களில் இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இவ்வாறு நாடு திரும்பியோரில் பெண்கள் மற்றும் ஆண்களும் அடங்குகின்றனர்.
சவுதி அரேபியாவிலிருந்து 33 பேரும், கட்டாரிலிருந்து 8 பேரும், ஜோர்தானிலிருந்து 15 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பியுள்ளோரில் 1 ஆண் மற்றும் 2 பெண்கள் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தற்போது அங்கொடை மனநோயாளிகள் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மற்றையோருக்கு பணம் வழங்கி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மத்தியகிழக்கில் நிர்க்கதி நிலை: 56 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
Reviewed by Admin
on
September 16, 2013
Rating:

No comments:
Post a Comment