வடமாகாண சபை தேர்தலில் இப்படியும் நடந்தது
நடந்து முடிந்த வடமாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் கடுமையான பிரச்சாரம் நடை பெற்றதை யாவரும் அறிந்ததே இதன் போது வேட்பாளர்களும் தங்களது விருப்பு வாக்கிற்காக பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது குறித்த வேட்பாளர் ஒருவருக்காக ஆதரவாளர் ஒருவர் குறிப்பிட்ட பிரதேசம் ஒன்றில் அந்த மக்களிடம் இறுதி நேரத்தில் குறித்த இலக்கத்திற்கு மட்டும் புள்ளடி இடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இதை சரியாக விளங்கிக்கொள்ளாத சில மக்கள் கட்சியின் சின்னத்திற்கு புள்ளடி இடாமல் குறித்த இலக்கத்திற்கு மாத்திரமே புள்ளடி இட்டுள்ளனர்.
25 வருடங்களின் பின் மக்கள் தேர்தலை எதிர்கொண்டதாலும் இறுதிநேரத்தில் சிலர் தெளிவு படுத்தாமல் குழப்பியதால் இந் நிலை ஏற்பட்டுள்ளது
இனியாவது வரும் தேர்தல் நேரங்களில் மக்களை தயவு செய்து குழப்பாதீர்கள் இதனால் கட்சிக்கு கிடைக்ககூடிய வாக்கு இல்லாமல் போய் விட்டது.
குறிப்பு- வடமாகாண சபை தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகள்
மன்னார் 2972,
வவுனியா 4416,
கிளிநொச்சி 4735,
முல்லைத்தீவு 2820,
வடமாகாண சபை தேர்தலில் இப்படியும் நடந்தது
Reviewed by Admin
on
September 24, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment