அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள மாணவர்கள் அனுபவிக்கும் உரிமை தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அனுபவிக்க வேண்டும்; கல்வி அமைச்சர் தெரிவிப்பு

தமிழ், முஸ்லிம் மாணவர்களும் சிங்கள மாணவர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் நாட்டின் கல்விக் கொள்கை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்துள்ளார். இன்று பிரபல பாடசாலைகள் எனக் கருதப் படுபவைகள் அனைத்தும் 1ஏபி தரப்பாடசாலைகளாகும். இவற்றிற்கு மாணவர்களைச் சேர்க்கவே இன்று பெற்றோர் பெரும் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.


 மாணவர்களும் ஓய்வின்றி அதிகாலை முதல் நகரப் பாடசாலைகளுக்கு படை எடுக்கின்றனர். இச்சிரமத்தைக் குறைக்க நாம் கிராமப்புறங்களில் 1ஏபி சுப்பர் தரப்பாடசாலைகளை அமைக்கவுள்ளோம்

. அடுத்த வருடம் முடிவடைவதற்குள் இவ்வாறான 1ஏபி சுப்பர் பாடசலைகள் 200 ற்கும் மேல் அமைக்கப்பட்டு விடும். க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறைக்கு 25 சதவீதமாகவும், வர்த்தகத்துறைக்கு 35 சதவீதமாகவும், விஞ்ஞான தொழில் நுட்பத்துறைக்கு 40 சதவீதமாகவும் மாற்றப்படவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியதுடன், இன்று தொழிற்சந்தையில் பாரிய கேள்வி நிலவுவது வர்த்தகத்துறைக்கும் தகவல் தொழில் நுட்பத்துறைக்குமாகும்.

 இதற்காகக் கல்வித் திட்டத்தில் பாரிய மாற்றம் ஒன்று தேவைப்படுகிறது. அதனையே நாம் மேலே சொன்ன 1ஏபி சுப்பர் பாடசாலை மூலமாக அடையவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள மாணவர்கள் அனுபவிக்கும் உரிமை தமிழ், முஸ்லிம் மாணவர்களும் அனுபவிக்க வேண்டும்; கல்வி அமைச்சர் தெரிவிப்பு Reviewed by Admin on September 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.