அண்மைய செய்திகள்

recent
-

முழு இலங்கையும் எனக்கு ஒன்றே!- கிளிநொச்சியில் ஜனாதிபதி

தனக்கு முழு இலங்கையும் ஒன்றுதான் என தெரிவித்துள்ள ஜனாதிபதி தனது சொந்த கிராமத்திற்கு ரயில் பாதையை நிர்மாணிக்கும் முன்னர் வடக்குக்கு அதனை நிர்மாணித்து கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். 

ஓமந்தையில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி ரயிலில் இன்று முற்பகல் 9.27 மணிக்கு கிளிநொச்சி ரயில் நிலையத்தில் இறங்கிய போதே இதனை கூறினார். 

 அங்கு தொடர்நதும் பேசிய ஜனாதிபதி, சிங்கள, தமிழ், முஸ்லிம் என சகல மக்களும் ஒன்று. அவர்கள் அனைவரும் ஒரே விதமாகவே நடத்தப்படுவர். வடக்கு மக்களுக்காக செய்ய முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றார். கிளிநொச்சிக்கு சென்ற ஜனாதிபதி உட்பட சிறப்பு விருந்தினர்கள் இந்து கலாசார முறைப்படி வரவேற்கப்பட்டனர். 

 ஜனாதிபதியுடன் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா ஆகியோரும் சென்றிருந்தனர்.

முழு இலங்கையும் எனக்கு ஒன்றே!- கிளிநொச்சியில் ஜனாதிபதி Reviewed by Admin on September 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.