மன்னாரில் பெரும்போக நெற்செய்கை தொடர்பாக மேலதிக அரச அதிபர் தலமையில் கலந்துரையாடல்.
மன்னார் மாவட்டத்தில் இம்முறை முன்னெடுக்கப்பட இருக்கும் பெரும்போக நெற் செய்கை தொடர்பான
கலந்துரையாடல் ஒன்று நேற்று (24-09-2013) மன்னார் உயிலங்குளம் பாடசாலையில் இடம்பெற்றது .
மன்னாரில் பெரும் போகச்செய்கைக்கான காலம் அண்மித்திருக்கும் நிலையில் அது தொடர்பிலான சாதக , பாதக நிலையினை ஆராயும் பொருட்டு இக்கலந்துரையாடல் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமெல் தலமையில் இடம்பெற்றது .
மேற்படி கலந்துரையாடலில் இம்முறை பெரும் போகச் செய்கையில் ஈடுபட இருக்கும் பெருமளவிலான விவசாயிகள் கலந்து கொண்டனர் .
கட்டுக்கரை குளத்தின் சேமிப்பில் உள்ள சுமார் 6300 ஏக்கர் அடி நீரை பயன்படுத்தி மன்னார் மாவட்டதில் சுமார் 24.438 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முறை கால போகச்செய்கை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது .
கால போகச்செய்கையில் ஈடுபட இருக்கும் விவசாயிகளுடன் இடம்பெற்றிருக்கும் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொன்டு தமது கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர் .
மன்னாரில் பெரும்போக நெற்செய்கை தொடர்பாக மேலதிக அரச அதிபர் தலமையில் கலந்துரையாடல்.
Reviewed by Admin
on
September 25, 2013
Rating:

No comments:
Post a Comment