போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கடினமாக உழைக்கவேண்டும்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கியுள்ள ஆணைக்கு தமி ழ்த் தேசியக்
கூட்டமைப்பு மதிப்பளிக்கவேண்டும் . அத்துடன் தமிழரின் இறுதித் தீர்வுக்காக விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்தும் போராட வேண்டும் என வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு நேற்று முன்தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா . சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு யாழ் . ரில்கோ விடுதியில் நேற்று முன்தினம் மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது .
இந்தச் சந்திப்பில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு அழைப்பை விடுத்துள்ளார் .
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் எங்களுக்குப் பெரும் பலத்துடனான ஆணையை வழங்கியுள்ளனர் .
தமிழ் மக்கள் எங்களை நம்புகின்றார்கள் .
நாங்கள் அந்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவேண்டும் . எங்கள் மக்களின் இறுதித் தீர்வுக்காக விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்தும் போராடுகின்ற அதேவேளை , போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் நாம் கடினமாக உழைக்க வேண்டும் .
தமிழ் மக்களின் விடிவுக்காக எமது உரி மைப் போராட்டத்தை தொடர்ந்தும் முன் னெடுப்போம் . அதற்காக அனைவரும் சேர்ந்து உழைப்போம் என்றார்
.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய கிளிநொச்சி , முல்லைத்தீவு , வவுனியா , யாழ்ப்பாணம் , மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகிய கூட் டமைப்பின் உறுப்பினர்களும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , சுமந்திரன் , செல்வம் அடைக்கலநாதன் , சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர் .
போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக கடினமாக உழைக்கவேண்டும்.
Reviewed by Admin
on
September 25, 2013
Rating:

No comments:
Post a Comment