அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேச பிரஜைகள் குழு கூட்டமும் உள்ளுராட்சி சபைகளும் அதன் கடமைகள் பற்றியுமான விளக்கம் அளித்தலும்

28-09-2013 அன்று முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் மாதாந்த கலந்துரையாடலும் இ உள்ளுராட்சி சபைகளும் அதன் கடமைகள் பற்றியுமான பிரஜைகளுக்கு விளக்கம் அளிக்கும் செயலமர்வும் காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல 1.00 வரை சவேரியார்புரம் சேவாலங்கா மண்டபத்தில் முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் திரு. சுனேஸ் அவர்களின் தலமையில் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் முதலில் முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் திரு. சுனேஸ் அவர்கள் தலமையுரை நிகழ்த்தினார் இதில் குறிப்பாக வட மாகாண சபை தேர்தலின் முடிவுகள் பற்றியும் மக்களின் ஏகமனதான ஒற்றுமையையும் வெளிபடுத்தியமையை இட்டு தமிழ் முஸ்ஸிம் பிரஜைகளுக்கு நன்றிகளை கூறி நிற்பதோடு போட்டியிட்ட வேட்பளர்கள் பற்றியும் அவர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் மக்களுக்கு தெளிவுப்படுத்தியதோடு தொடர்ந்தும் பிரஜைகளின் கிராம மட்டத்திலான பிரச்சினைகளை தெரியப்படுத்தி தீர்வினை பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு களமாக இந்த வட மாகாண சபை தேர்தல் அமைந்துள்ளது எனவும் இத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

பின்னர் திருகோணமலை மாவட்டத்தின் முன்னைய நாள் உள்ளுராட்சி ஆனையாளர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் பிரஜைகளுக்கு கருத்து தெரிவிக்கையில் உள்ளுராட்சி சபைகளும் அதன் கடமைகள் பற்றியுமான விளக்கம் மக்களுக்கு அளிக்கப்பட்டது. இதில் குறிப்பாக கிராம சபைகள் மற்றும் பட்டினசபைகள் இன்னும் நகரசபை மாநகரசபை என்பன எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது பற்றியும் உள்ளுராட்சி சபைகளின் கடமைப்பாடு மற்றும் உள்ளுராட்சி தினைக்களங்கள் மக்களுக்கு எவ்வாறான சேவைகளை மேற் கொள்ள வேண்டும் எனவும் பிரஜைகளுக்கு தெளிவுப்படுத்தி கூறியதோடு கிராமசபை எத்தனையாம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது எனவும் பட்டின சபைகள்இ நகரசபைகள்இ மாநகரசபைகள்இ மாவட்டசபைகள் இ பிரதேசசபைகள் என்பன எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருக்கின்றார்கள் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

பின்னர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இலங்கைளில் இன்றைய நிர்வாக முறை எவ்வாறு பாவிக்கப்படுகின்றது எனவும்  உள்ளுராட்சி சபைகள் எவ்வாறு நிதியினை பெறுகின்றார்கள் எனவும் குறிப்பாக 
பல வித வரிகள்
உரிமக்கட்டணம்
வாடகைகள்
குத்தகைகள்
மத்திய அரசால் பெறும் நிதி இவ்வாறான முறைமூலம் நிதியினை பெறுகின்றார்கள் என மக்களுக்கு தெளிவுப்படுத்தியதுடன் தெரியப்படுத்தப்பட்டும் உள்ளன.

உள்ளுராட்சி  தேர்தலில்  வெற்றி பெற்று அதிகூடிய வாக்குகளை பெறும் கட்சிகள் கூடிய ஆசனங்களைப் பெற்று தங்களின் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்றும் நிர்வாகத்தினை அவர்கள் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் எனவும் குறிப்பாக எல்லா கொடுப்பனவுகளுக்கும் சபையின் அங்;கிகாரம்  பெறப்பட்வேண்டும் எனவும் சபை கூட்டங்கள் சபையின் உப விதிகளுக்கு அமைவாக நடாத்தப்பட வேண்டும் எனவும் மிகவும் தெளிவாகவும் விளங்கக் கூடிய விதத்திலும் பிரஜைகளுக்கு தெரியப்படுத்தி தெளிவுப்படுத்தினார்.

இச் செயலமர்விற்கு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலமைச்செயலக அதிகாரி பிரதீப் மற்றும் திருகோணமலை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் வெளிக்கள் அலுவலகர் திரு .றகீம் மற்றும் மன்னார் மாவட்ட பெண்கள் திட்ட வெளிக்கள் அலுவலகர் செல்வி. பிரியந்தா மற்றும் வெளிக்கள் அலுவலகர் திரு.சோதி மற்றும் முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் கிராம மட்ட பிரஜைகள் 30 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றதுடன் தினைக்களங்களின் கடமைக்கள் மற்றும் சேவைகள் பற்றி தெளிவு பெற்றமை குறிப்பிடத்தக்க விடயம்.                     







முசலி பிரதேச பிரஜைகள் குழு கூட்டமும் உள்ளுராட்சி சபைகளும் அதன் கடமைகள் பற்றியுமான விளக்கம் அளித்தலும் Reviewed by Admin on September 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.