அண்மைய செய்திகள்

recent
-

வடக்குமாகாணசபைத் தேர்தலும், கிழக்குமாகாணசபைத் தேர்தலும் – ஓர் ஒப்பீடு

21.09.2013 அன்று நடந்து முடிந்துள்ளவடக்குமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) அளிக்கப்பட்டவாக்குகளில் 353,595 (78.48%)வாக்குகளைப் பெற்றுபோனஸ் ஆசனங்கள் இரண்டுஉட்படமொத்தம் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களை வென்று மூன்றிலிரண்டுபங்குஅறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சமூக,பொருளாதார,அரசியல் மீட்சியின் மீதுஅக்கறைகொண்டஅனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட, விரும்பப்பட்டவிடயம் இது. இன்றைய ஈழத் தமிழ்ச் சூழலில் முழுத் தமிழ் உலகும் அகம் மகிழவேண்டியநிகழ்வு இது.

ஆளும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 07 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி 01 ஆசனத்தையும் பெற்றிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு30 ஆசனங்களைக் கைப்பற்றுவது வடக்குமாகாணத்தில் சாத்தியமே. வடக்குமாகாணத் தமிழர்கள் உணர்வுபூர்வமாகவும்,அறிவுபூர்வமாகவும் வாக்களித்துள்ளனர் என்பதேபொதுவானமதிப்பீடு.

ஆனால் இது கிழக்குமாகாணத்தில் சாத்தியமா? இல்லை. எனவேவடக்குமாகாணசபைத் தேர்தலுக்கானஅளவுகோலைக் கிழக்குமாகாணத்துக்கும் பயன்படுத்தமுடியுமா?

இதற்கானவிடையைச்சென்றவருடம் 08.09.2012அன்றுநடைபெற்றகிழக்குமாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிட்டுஆராய்ந்துபெறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

கிழக்குமாகாணசபையின் மொத்தஉறுப்பினர்கள் 37 பேர். அதில் தேர்தலில் நேரடியாகத் தெரிவுசெய்யப்படுபவர்கள் 35 பேர். 02 போனஸ் ஆசனங்கள். ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றவேண்டுமானால் தனிக் கட்சியொன்றுஆகக் குறைந்ததுதேர்தலில் நேரடியாக 17 ஆசனங்களையாவது (போனஸ் ஆசனங்கள் தவிர) பெற்றாகவேண்டும். இது ஒருபோதும் சாத்தியமில்லை.

ஒட்டுமொத்தமாகக் கிழக்கிலுள்ளதமிழ் முஸ்லிம்,சிங்களவாக்காளர்களின் விகிதாசாரத்தைவைத்துப் பார்க்கும் போதுகிழக்கில் ஒரேயோருதமிழ்க்கட்சிபோட்டியிட்டுஅக்கட்சிக்குக் கிழக்கில் 100%தமிழர்கள் வாக்களித்தாலும்கூட அத்தமிழ்க் கட்சிதானும் மேற்படி 17 ஆசனங்களைப் பெறச் சாத்தியமே இல்லை.

எனவேகிழக்கில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புவடக்கைப் போல் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுமாகாணஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் சாத்தியம் எக்காலத்திலும் இல்லை. இதுவே யதார்த்தம்.

சென்றகிழக்குமாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தின் போதுகிழக்குமாகாணசபையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புஅறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றும் எனஆரம்பத்தில் கூறியதுதவறானதுஎன்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மொத்தம் 37 ஆசனங்களில் 11 ஆசனங்களையேகைப்பற்றமுடிந்தது.

இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் நோக்கும் போதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்புவேறுஏதாவதொருகட்சியுடன் கூட்டுச் சேர்ந்துதான் ஆட்சியமைக்கமுடியும். இதனால்தான் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துமுதலமைச்சர் பதவியையும் அவர்களுக்குக்கொடுக்கச் சம்மதித்துஆட்சியமைப்போம் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கூறியது. ஆனால் அதுநடைபெறவில்லை. நடந்ததுஅனைவருக்கும் தெரியும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைஅதுஐக்கியமக்கள் சுதந்திரக் கட்சியென்றாலும் சரிதான் அல்லதுஐக்கியதேசியக் கட்சியென்றாலும் சரிதான் அல்லது வேறொருகட்சியென்றாலும் சரிதான் மத்தியில் அதிகாரத்தில் உள்ளஆளும் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்துஅதனால் வரும் ஆதாயங்களைப் பெற்றுக் கொள்ளுமே தவிரதமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துஎதிர்ப்புஅரசியலைஎக்காலத்திலும் முன்னெடுக்கமாட்டாது.

விதிவிலக்காகச் சிலவேளைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்துஆட்சியமைத்தால் கூட அதுகிழக்குத்தமிழர்களுக்கு எந்தவிதமானசமூக,பொருளாதார,அரசியல் நன்மைகளையும் பெற்றுத்தரப் போவதில்லை. மாறாகவழமைபோல் முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் மேலாதிக்கமே அங்குதலைதூக்கும்.அதுகிழக்குத் தமிழர்களுக்குஉதவப் போவதில்லை.
கிழக்கில் எம்.எஸ்.காரியப்பர் காலத்திலிருந்து எம்.எச்.எம்.அஸ்ரப் காலம் வரையிலானஅறுபதுவருடகாலஅரசியல் அனுபவம் கிழக்குத் தமிழர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளபாடம் இது. இந்தப் பின்புலத்தில் கிழக்குத் தமிழர்களுக்குநன்மையளிpக்கக் கூடியமாற்றுவழி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புமத்தியில் அதிகாரத்தில் உள்ளஆளும் கட்சியுடன் அதுஐக்கியமக்கள் சுதந்திரக் கட்சியென்றாலும் சரிஅல்லதுஐக்கியதேசியக் கட்சியென்றாலும் சரிஅல்லதுவேறொருகட்சியென்றாலும் சரிஅத்துடன் கூட்டுச் சேர்வதேயாகும். இதுவும் நடைபெறப் போவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரைகிழக்கில் சிங்களப் பேரினவாதக் கட்சியொன்றுடன் கூட்டுச் சேர்வதன் மூலம் வடக்கில் தனதுஅரசியல் தளத்தை இழக்கஅல்லதுபுலம்பெயர் தமிழ்ச் சமூகத்திடம் தன் செல்வாக்கை இழக்கஅதுதயாராயில்லை. இந்நநிலையில் கிழக்குத் தமிழர்கள் கிழக்கைத் தம் வசம் வைத்துக் கொள்ளக்கூடியமற்றுமொருமாற்று வழி எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ‘வைக்கோல் பட்டறை நாய்’போல் நடந்துகொள்ளாமல் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாதுஒதுங்கிவிடுவதாகும்.

கடந்ததேர்தலில் (2012),அதற்குமுந்தியமுதலாவதுகிழக்குமாகாணசபைத் தேர்தலின் போது (2008)நடந்துகொண்டதுபோல் பிரிக்கப்பட்டவடக்குக் கிழக்கில் போட்டியிடமாட்டோம்என்றநிலைப்பாட்டைஎடுத்துஅத்தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கியதைப் போன்றுதமிழ் தேசியக் கூட்டமைப்புசெயற்பட்டிருக்குமானால் தற்போதுஏற்பட்டுள்ள குழப்பநிலை கிழக்குத் தமிழர்களுக்குஏற்பட்டிருக்கமாட்டாது.

ஏனெனில்,மாகாண சபை இனப் பிரச்சனைக்கானதீர்வினைஎட்டதெரிவுக்குழுஅமைத்துச் செயற்படும் அரங்குஅல்ல. குறைகள் இருந்தாலும் நடைமுறையில் இருக்கும் 13வது அரசியல் திட்டத் திருத்தத்தின் மூலம் பெறக்கூடியஅனுகூலங்களைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடியஓர் நிர்வாகப் பொறிமுறையாகும்.

தேசியஅரசியலிலும் சர்வதேசஅரசியலிலும்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள் இராஜதந்திரரீதியாகக் கொண்டு செல்லப்படவேண்டுமேதவிரஅதற்கானபொருத்தமானதளம் மாகாண சபை அல்ல.

மேலும்,தென்னிலங்கைஅரசியலில் – இந்துசமுத்திரப் பிராந்தியஅரசியலில் – சர்வதேசஅரசியலில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்காலத்தில் சிலவேளை வடக்குக்கிழக்குமாகாணங்கள் இணையவேண்டிவந்தால்கூட கிழக்கு கிழக்காக இருந்தால் தானே வடக்குடன் இணையமுடியும். இல்லாதஒன்றைஎப்படிவடக்குடன் இணைக்கமுடியும். கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் பண்ணமுடியாது.

இனப்பிரச்சினைக்கானஅதிகுறைந்தபட்சஅரசியல் தீர்வாகஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு மொழிவாரி சுயாட்சிமாநிலம் தான் (வடக்குக்கிழக்கு இணைந்த) அமையமுடியும்என்பதே இக்கட்டுரையாசிரியரின் கருத்தாகும்.

ஆனால் நாம் விரும்புவதுவேறு. யதார்த்தம் வேறு. எதிர்காலத்தில் அரசியலமைப்பு ரீதியாகவோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளினூடாகவோ வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைவதற்குரிய சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இந்தநடைமுறை யதார்த்தத்தையும்,அரசியல் களநிலையையும் புரிந்து கொண்டு கிழக்கு மாகாண சபையைத் தமிழர்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்குத்தடையைஏற்படுத்தாதுகிழக்குமாகாணத் தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களேதீர்மானிப்பதற்கு இடமளித்துஎதிர்காலத்தில் கிழக்குமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிவிடுவதே அறிவுபூர்வமான இராஜதந்திரஅணுகுமுறையாகும்.

வடக்குக் கிழக்கு இணைந்ததனிமாகாண சபை மீண்டும் உருவாகும் காலம் வரையாவதுதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இதனைச் செய்யவேண்டும். இந்தஅரசியல் செயற்பாடுநாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தீராத நோயொன்றைக் குணப்படுத்தி உயிரொன்றைக் காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சை போன்று தவிர்க்க முடியாததும், விஞ்ஞானபூர்வமானதுமாகும்.

இதனைநடைமுறைப்படுத்துவதற்கானமாற்றுஅரசியல் சிந்தனை -புதியஅரசியல் யுக்தி-பொறிமுறைகிழக்குமாகாணத் தமிழர்களிடையே இப்போதிருந்தே உருவாகி வளர வேண்டும். ஏனெனில் அழுதும் பிள்ளைஅவளே பெற வேண்டும்.

இலங்கைசுதந்திரம் அடைந்தகாலத்திலிருந்து இன்றுவரை 65 வருடகாலஅரசியலைப் பொறுத்தவரைவாடகைவீட்டில் வசித்துவந்தகிழக்கிலங்கைத்தமிழருக்கு இன்றுசொந்தவீடொன்றின் தேவையை 08.09.2012 ல் நடைபெற்றகிழக்குமாகாணசபைத் தேர்தலின் முடிவுகளும்,விளைவுகளும் உணர்த்தியுள்ளன.

எதிர்காலத்தில் கிழக்குமாகாணத் தமிழர்களுக்குஓர் சுயமானமாற்றுஅரசியல் பாதை (தளம்) தேவை. அந்தமாற்றுஅரசியல் தளம் என்பதுசிங்களப் பேரினவாதக்கட்சியொன்றில் சங்கமமாகிவிடுவதல்ல. பதிலாககிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் சமூக,பொருளாதார,அரசில் பிரச்சினைகளின் வடிவங்களைப் பொறுத்துச் சுயமானஅரசியல் தளத்தில் நின்றுகிழக்குத் தமிழர்களைச் சமூக,பொருளாதார,அரசியல் மேம்பாட்டை நோக்கி அறிவுபூர்வமாக ஆற்றுப்படுத்தும் பொறிமுறையே ஆகும்.

அப்பொறிமுறையானதுஎந்த இனத்திற்கோ, எந்த மதத்திற்கோ,எந்தப் பிரதேசத்திற்கோ,எந்தக் கட்சிக்கோஎதிரானதல்ல.
இத்தகைய பொறிமுறையொன்றினுள் தற்போதுசகலஅரசியல் கட்சிகளிலும் அங்கம் வகிக்கும் சகலகிழக்குத் தமிழ் அரசியல்வாதிகளும்-கிழக்குத் தமிழர்களிடையேயுள்ள சமூகஅக்கறைகொண்டசகலகல்விமான்களும் -எழுத்தாளர், கலைஞர், ஊடகவியலாளர்களும் -தொழில்சார் நிபுணர்களும்,ஆர்வலர்களும் கட்சிஅரசியல் போட்டாபோட்டிகளுக்கப்பால் மக்களுக்கானஅரசியல் கலாசாரமொன்றினைக் கட்டியெழுப்பும் நோக்கமாகக் கொண்டுஉள்வாங்கப்படவும் அணிதிரளவும் வேண்டும்.

இப்பொறிமுறையினூடாகஎதிர்காலத்தில் கிழக்கிலிருந்து மேற்கிளம்பக் கூடியதமிழ் அரசியல்சக்தியானதுஈழத் தமிழ்த் தேசிய இனத்திற்குநன்மையளிக்கக் கூடியபொதுவானவேலைத்திட்டமொன்றின் கீழ் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பங்காளியாக இணைந்துசெயற்படவும் தடையேதும் இல்லை.

தம்பியப்பா கோபாலகிருஸ்ணன்
வடக்குமாகாணசபைத் தேர்தலும், கிழக்குமாகாணசபைத் தேர்தலும் – ஓர் ஒப்பீடு Reviewed by Admin on September 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.