சர்வதேசத்திற்கு வடமாகாண மக்களின் வாக்களிப்பு வீதம் நிரூபித்துக் காட்டியுள்ளது
வட மாகாண மக்களின் வாக்களிப்புத் தீர்வானது பேரினவாதத்திற்கா? அரசின் அபிவிருத்திக்கா? அல்லது தமிழ் கூட்டமைப்பின் சுயாட்சி முறைக்கா? என்பதை அவதானித்து கொண்டிருந்த சர்வதேசத்திற்கு வடமாகாண மக்களின் வாக்களிப்பு வீதம் நிரூபித்துக் காட்டியுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்!
நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களில் சர்வதேசத்தின் பார்வையானது வட மாகாண மக்களின் பேராதரவு எந்த கட்சிக்கு கிடைக்கும் என்பதை மிக உன்னிப்போடு எதிர்பாத்ததுடன் போட்டியிடும் கட்சிகளின் பிரதான கொள்ளைத் திட்டங்களை என்னவென்பதையும் கவனத்தில் கொண்டிருந்தது.
கொள்ளை திட்ட பரப்புரைகளில் ஒற்றையாட்சியின் கீழ் பிளவுபடாத நாட்டிற்குள் வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சுயாட்சி அதிகாரங்களை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களிக்கும் படி தமிழ் கூட்டமைப்பினர் மக்களைக் கேட்டு கொண்டதையும் அரசும் ஏனைய பேரினவாத கட்சிகளும் மத்திய, வடமேல் மாகாண மக்களிடம் பேசும் போதும் தமிழ் கூட்டமைப்பினரின் வட மாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞானமானது நாட்டைப் பிளவுபடுத்தும் உபாயம் எனவும், சிங்கள மக்களை ஆயுதம் ஏந்தும் அளவிற்கு இன வாதத்தை தூண்டுவதாகவும் பெரும்பான்மை இன மக்களின் ஆதரவை தமது கட்சிகள் பெற்றுக் கொள்ளும் விதத்தில் தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முரண்பட்ட கருத்துக்களை இனவாதம் கலந்த தொனியில் பேசியதையும், அதேவேளை வட மாகாண மக்களிடம் பேசும் போது அபிவிருத்தி மாயயை காட்டி பேசியதுடன் தமிழ் கூட்டமைப்பினர் அவர்களின் பிரச்சாரங்கள் மூலம் வடமாகாண மக்களுக்கு சயனைட்டை வழங்குகிறார்கள் என்றும் தமிழ் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்ததையும் சர்வதேசம் கவனித்துக் கொண்டே வந்தது.
இத்தேர்தலில் வட மாகாண மக்களின் வாக்களிப்புத் தீர்வானது பேரினவாதத்திற்கா? அரசின் அபிவிருத்திக்கா? அல்லது தமிழ் கூட்டமைப்பின் சுயாட்சி முறைக்கா? என்பதை அவதானித்து கொண்டிருந்த சர்வதேசத்திற்கு வடமாகாண மக்களின் மூன்றில் இரண்டுக்கும் மேலாக வாக்களிப்பு வீதமான தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை திடமும் தெளிவுமாக அங்கீகரித்து வெளிப்படுத்தி உள்ளதுடன், இனவாத்திற்கு பேரடியாகவும் அமைந்துள்ளது. வடமாகாண மக்களின் இத்தீர்விற்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களும் நான் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சிரம் தாழ்;த்தி நன்றி தெரிவிக்கின்றோம் என்றார்.
சர்வதேசத்திற்கு வடமாகாண மக்களின் வாக்களிப்பு வீதம் நிரூபித்துக் காட்டியுள்ளது
Reviewed by Admin
on
September 25, 2013
Rating:

No comments:
Post a Comment