வட மாகாண மெய்வன்மை விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கான ஐந்து நாள் வதிவிட பயிற்சிகள் இன்றுடன் நிறைவு
இன்றுடன் நிறைவடையவுள்ள இந்த வதிவிடப்பயிற்சி நெறியில் தென்னிலங்கையில் இருந்து வருகை தந்துள்ள தேசிய மட்டத்திலான பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளையும் வழங்கி வருகின்றார்கள் .
ரி . எம் . தெய்வேந்திரம் , கே . குலரத்தினா , பி . டிசில்வா , எம் . பியசேனா , ரி . ரஜிதசேனா , எஸ் . ஜெயசிஙகா , பிபெர்ணதன்டோ , எஸ்ரூவான்பெரெரா , எஸ் . சுசந்த , திலகரத்தினா இவர்களுடன் வட மாகாண விளையாட்டு அமைச்சின் பயிற்சியாளர் என் . முகுந்தன் வட மாகாண கல்வி அமைச்சின் பயிற்சியாளர்களான எம . லுசி மிரண்மோ , ரமேஸ் , ரி . பாகீஸ்வரன் , எஸ . கமலமோகன் , எஸ . யோகிதன் , ரி . சுகிர்தன் ஆகியோர் இனைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .
வட மாகாண கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே . சத்தியபாலனின் வழி காட்டலில் இடம் பெறும் இந்த வதிவிடப் பயிற்சி முகாமில் வவுனியா , முல்லைத்தீவு , கிளிநொச்சி , யாழ்ப்பாணம் , மன்னார் மாவட்டங்களை சேர்ந்த வீர வீராங்கனைகள் சுமார் நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நாளாந்தம் கலந்து கொண்டுள்ளார்கள் .
இதே வேளை மன்னார் மாவட்டத்தில் இருந்து சுமார் நாற்பத்தைந்துக்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்துகொள்ள வேண்டிய போதிலும் ஆறு பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளமையும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்.
வட மாகாண மெய்வன்மை விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கான ஐந்து நாள் வதிவிட பயிற்சிகள் இன்றுடன் நிறைவு
Reviewed by Admin
on
September 13, 2013
Rating:

No comments:
Post a Comment