ஜனநாயக நாட்டில் உள்ள மக்கள் எந்த இடத்திலும் வாழக்கூடிய உரிமை உள்ளது அதை காப்பாற்ற வேண்டியது எனது கடமை-மன்னாரில் ஜனாதிபதி
2005 ம் ஆண்டு 2010 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலே இந்த மாவட்டமே அதிகபடியான வாக்குகளை பெற்றுத்தந்தது. இன்று போல அன்றும் இதே போன்று தான் றிஸாட் பதியுதீனும் பாடுபட்டார்.என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
வடமாகாண சபை தேர்தலில் ஆளும் தரப்பிற்கு ஆதரவு வழங்கும் முகமாக தேர்தல் பரப்புரைக்கூட்டம் நேற்று புதன் கிழமை மாலை மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,
தமிழீழ விடுதலைபுலிகளில் சில உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த சில உறுப்பினர்களும் எங்களோடு சேர்ந்தார்கள் .அதற்காக நான் சந்தோசப்படுகிறேன்.
பாராளுமன்ற பொதுத்தேர்தலின் போதும், பிரதேச சபைத் தேர்தலின் போதும், ஜனாதிபதி தேர்தலின் போதும் உங்கள் வாக்குகளை நீங்கள் பயன்படுத்தினீர்கள். இப்போது மாகாணசபை தேர்தலை நாங்கள் ஒழுங்கு செய்திருக்கின்றோம்.
இந்த மாகாணசபை தேர்தலை நடாத்துவதே இந்த கூட்டமைப்பு அரசாங்கத்தின் பாரிய வெற்றி என்பதை நான் உங்களுக்கு கூறிநிற்க விரும்புகின்றேன்.
நாங்கள் வெளிநாட்டவர் சொன்ன காரணத்தினாலோ இங்கே உள்ளவர்கள் சொன்ன காரணத்தினாலோ இந்த மாகாணசபை தேர்தலை நடாத்தவில்லை.
ஜனநாயகத்தை மென்மேலும் சக்திமயப்படுத்துவதற்காக அதேபோன்று இங்கே இருக்கக்கூடிய மக்ககுக்கு மக்கள் உறுப்பினர்களை தெரிவு செய்து மாகாணசபைக்கு அனுப்பி அவர்கள் மூலமாக பல சேவைகளை செய்வதற்காக வேண்டித்தான் நாங்கள் இந்த மாகாணசபைத் தேர்தலை ஒழுங்கு செய்தோம்.
இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன் .தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளை நேரடியாக அல்ல மறைமுகமாக செயற்படுத்துகின்றார்கள்.
இங்கே எனக்கு முன்பதாக தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் வந்தார்கள் அவர்களுக்கு ஒரு கை இல்லை, ஒரு கால் இல்லை ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் பிள்ளைகளோ இந்தியாவிலே, இங்கிலாந்திலே, அமெரிக்காவிலே படித்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் இங்கிருப்பவர்கள் கஸ்டப்பட்டவர்களும் அப்பாவி இளைஞர்கள் யுவதிகளும் ஆவர்.
எனவே வேறு நாட்டில் இருப்பேர்களுக்காகத்தான் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்துகொண்டிருக்கின்றது.
எனவே மீண்டும் பிரிவினவாதத்தை உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றார்கள்.
இந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பாளர்கள் இன வாதத்தை மத வாதத்தை பேசி அந்த உணர்வுகளை தட்டி எழுப்பி அதன் மூலமாக வாக்குகளை திரட்ட பார்க்கின்றார்கள்.
நாம் எல்லோரும் இந்த நாட்டிலே பிறந்த மக்கள். நாம் பேசும் மொழி வேறாக இருக்களாம் ஆனால் நம் கைகளை வெட்டிப்பார்த்தால் அதில் வரக்கூடிய இரத்தம் சிவப்பு நிற இரத்தம் தான்.
இன பேதத்தை வைத்துக்கொண்டு மத பேதத்தை வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அரசியல் தலைவர்களுக்கு நாம் ஒரு போதும் இடமளிக்கக் கூடாது.
இந்த ஜனநாயக நாட்டில் உள்ள மக்கள் எந்த இடத்திலும் வாழக்கூடிய உரிமை உள்ளது அதை காப்பாற்ற வேண்டியது எனது கடமை எனது பொறுப்பு.
வெற்றிலைச்சின்னத்திற்கு வாக்களித்தால் உங்களுடைய சகோதரர்கள் மாகாணசபைக்குப் போவார்கள் உங்களுக்கு சேவை செய்வார்கள்.
இதனைத்தொடர்ந்து ஜனாதிபதி தமிழில் பேசுகையில்,,,,,
சகோதர சகோதரிகளே நான் உங்களை சந்திப்பதில் எனக்கு பெரிய சந்தோஷம்.எல்.டி.டி.யி, முஸ்லிம் காங்கிரஸ்சில் இருந்து எம் பக்கம் வந்த எல்லோரையும் நாடு அன்போடு வரவேற்கிறது.
பல ஆண்டு காலமாக நீங்கள் பட்ட கஸ்டம் எல்லாம் எனக்குத் தெரியும் ஆனால் அந்ந நிலமை இனிமேல் இல்லை. இனிமேல் நீங்கள் நிம்மதியாக சந்தோசமாக பாதுகாப்பாக வாழ முடியும்.
வடக்கின் வசந்தம் முலம் உங்கள் பகுதியில் நாம் பல அபிவிருத்தி வேலைகள் செய்துள்ளேன். இன்னும் இன்னும் செய்வோம். நான் அதிகம் சேவை செய்யும் மாகாணம் உங்கள் வடமாகாணம் தான்.
உங்கள் பகுதியில் மீன்பிடி, வீடு, வீதி, பாலங்கள் வசதிகள் எல்லாம் செய்துள்ளோம்.
இன்னும் பல வசதிகள் வழங்குவோம். சங்குபிட்டி பாலம் உங்கள் எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதம். யுத்தம் 30 வருடம் அபிவிருத்தி 4 வருடம். அழிப்பது இலகு ஆக்குவது கஸ்டம்.
அந்த யுத்தத்தினால் நீங்கள் இழந்த உயிர்களை தவிர மீதி அனைத்தையும் நாங்கள் நிச்சயமாக மீட்டுத்தருவோம்.
உங்கள் பிரதேசம் இனி கஸ்டமான பிரதேசமாக இருக்க முடியாது. இன பேதம் மத பேதம் குல பேதம் பார்க்க வேண்டாம். நாம் எல்லோரும் இந் நாட்டின் தாய் மக்களே. தவரான வழியில் போக வேண்டாம் தவரான பிரச்சாரத்தை நம்ப வேண்டாம்.
பள்ளிவாசல் உடைக்கப்படுகின்றது என்று சொல்வதை நம்ப வேண்டாம் நாங்கள் பள்ளிவாசல்கள் கோவில்கள் விகாரைகளை கட்டுகிறவர்கள் என்பதை உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் .இந்த நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல பேர் எடுக்க வேண்டும் அதுதான் முக்கியம். உங்கள் கிராமம், நகரம், பிரதேசம் முன்னேற வேண்டும். எனவே ஒன்றாக வேலை செய்யக்கூடிய அன்பர்களை தெரிவு செய்தால் நல்லது. அப்போது உங்களுக்கம், எங்களுக்கம் வசதியாக இருக்கும்.
நான் எப்போதும் உங்களோடு இருப்பேன் உங்களை பாதுகாப்பேன். ஆகவே வெற்றிலை சின்னத்திற்கு உங்கள் வாக்ககளை போட்டு எனக்கு ஆதரவு தாருங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
இப்பிரச்சார கூட்டத்தின் போது 25 முன்னைநாள் புலி உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் முன்னனி கூட்டமைப்பில் சேரும் நேக்குடன் மேடையில் ஏறி ஜனாதிபதிக்கு கைலாகு கொடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
September 12, 2013
Rating:

No comments:
Post a Comment