வவுனியாவில் விவசாயிகள் தினம்
வவுனியாவிலுள்ள கள்ளிக்குளம் கிராமத்தில் விவசாயிகள் தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியாவிலுள்ள சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விவசாயிகள் தினத்தின்போது, கள்ளிக்குளம் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களின் காணிகளில் பயன்தரு மரங்களை நாட்டப்பட்டன.
அத்துடன், மேற்படி குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளையும் சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.
மேலும், கள்ளிக்குளம் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபடும் மக்களின் குறைநிறைகளையும் சமூக ஆர்வலர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் க.உதயராசா, கலைஞர் மாணிக்கம் ஜெகன், சமுர்த்தி உத்தியோகத்தர்களான கோ.சிவநேசன், வவுனியா பாடசாலை சாரணர்களும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் விவசாயிகள் தினம்
Reviewed by Admin
on
October 21, 2013
Rating:

No comments:
Post a Comment