அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நெடுங்கண்டல் கிராமத்தில் அமைக்கப்பட்ட 55 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.-படங்கள்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நெடுங்கண்டல் கிராமத்தில் போரினால் பாதிக்கப்பட்டு மீள் குடியேறிய மக்களுக்கு 'போர்த்துக்கல் கறிட்டாஸ் இலங்கை செடேக்' அமைப்பின் ஊடாக வழங்கிய நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட வீடுகள் நேற்று வியாழக்கிழமை(3-10-2013) மாலை பயனாளிகளுக்கு கையளிக்க்ப்பட்டது.

 'போர்த்துக்கல் கறிட்டாஸ் இலங்கை செடேக்' அமைப்பின் ஊடாக வழங்கிய நிதியுதவியுடன் மன்னார் வாழ்வோதயம் தலா 6 இலட்சம் ரூபா செலவில் அமைத்துக்கொடுத்த 55 வீடுகள் மேற்படி பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.

 மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, போர்த்துக்கல் நாட்டு கறிட்டாஸ் தலைவர் பொன்சேக்கா, இலங்கை தேசிய கறிட்டாஸ் இயக்குனர் அருட்பணி. யோர்ஐ; சிகாமணி அடிகளார், மன்னார் வாழ்வோதய இயக்குனர் அருட்பணி ஐயபாலன் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன் போது பயனாளிகளுக்கு வீட்டின் திறவுகோலை  வழங்கி வீட்டை அதிதிகள் திறந்து வைத்தனர்.










மன்னார் நெடுங்கண்டல் கிராமத்தில் அமைக்கப்பட்ட 55 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு.-படங்கள் Reviewed by Admin on October 04, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.