5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூல மாணவன் 19ஆவது இடத்தில் :70 வீதமானோர் சித்தி
2013 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய முதற்தர வரிசையில் தமிழ்மொழி மூலமான ஒரேயொரு மாணவர் மாத்திரம் 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். ஏனைய சித்தியெய்திய18 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் பரீட்சைகள் எழுதிய மாணவர்களாகும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.
அத்தோடு இம்முறை பரீட்சையில் 322,455 மாணவர்கள் தோற்றியதோடு இதில் 32,617 மாணவர்கள் சித்தியெய்துவதற்கான வெட்டுப் புள்ளிகளுக்கு மேலதிக புள்ளிகளை பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
இதேவேளை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 908 பேர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற் றுள்ளதாக பரீட்சைத்திணைக்களம் அறி வித்துள்ளது. இந்தப்பரீட்சையில் 69.44 வீத மானோர் சித்தியடைந்துள்ளனர் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்ன தெரி வித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று புதன்கிழமை கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பத்தரமுல்லையிலுள்ள இசுறுபாயவில் இடம்பெற்ற போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.ஏ.டி. புஷ்பகுமார வெளியிட்ட பெறுபேறுகள் அறிக்கையில் இவ்விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சைகளின் பெறுபேறுகளுக்கமைய முதலாமிடத்தில் 198 புள்ளிகளை பெற்ற சந்தரு தக்சர பலஹேவ காலி மஹிந்த வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலாமிடத்தை பெற்றுள்ளதோடு ஏனைய 17 இடங்களிலும் சிங்கள மொழி மூலமான மாணவர்களே முதல்தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பத்தொன்பதாவது இடத்தில் பரமானந்தன் தனுராஜ் யாழ்ப்பாணம், ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயம் சுன்னாகம் மாணவன் தமிழ் மொழி மூலம் சித்திபெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு 2012 இல் இடம்பெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளில் முதல் தர வரிசையில் சித்தியெய்திய தமிழ்மொழி மூலமான மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
ஆனால் இந்த ஆண்டு 2013 இல் தமிழ்மொழி மூலம் ஒரேயொரு மாணவன் மாத்திரம் 194 க்கு அண்ணளவாக புள்ளிகளை பெற்று 19 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இதன் மூலம் 2013 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலமான மாணவர்கள் பாரிய பின்னடைவை கண்டுள்ளனர். பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூல மாணவன் 19ஆவது இடத்தில் :70 வீதமானோர் சித்தி
Reviewed by Admin
on
October 03, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment