அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பு: 150 வள்ளங்கள் மூழ்கின

வடமராட்சி கிழக்கு கடற்கரை தொடக்கம் முல்லைத்தீவு செம்மலை வரையான பிரதேசங்களின் கடற்பகுதி கொந்தளித்தமையினால் 150 ற்கும் மேற்பட்ட மீனவ வள்ளங்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளன. வடமராட்சி கிழக்கு, மணற்காடு, கட்டைக்காடு, வண்ணார்குளம், செம்மலை, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களின் கடற்பகுதி இன்று சனிக்கிழமை அதிகாலை 12 மணி முதல் 12.05 வரையில் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

 இந்தக் கடற்கொந்தளிப்பினால் வடமராட்சி கரையோரங்களினை அண்டிய மீனவர்களின் 100 இற்கும் மேற்பட்ட வள்ளங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளதுடன், பல வள்ளங்கள் சேதமடைந்து, மீன்பிடி வலைகளும் கடலுடன் காணமற் போயுள்ளதாகவும் வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாஜம் தெரிவித்தது. 

 அதேவேளை, முல்லைத்தீவுக் கடற்பரப்பிலும் நிலவிய இந்த கடற்கொந்தளிப்பினால் 25 வள்ளங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கியுள்ளதுடன், 50 இற்கு மேற்பட்ட வள்ளங்கள் சேதமடைந்துள்ளதாகவும் வடமாகாண கடற்றொழில் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் எஸ்.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் கடற்கொந்தளிப்பு: 150 வள்ளங்கள் மூழ்கின Reviewed by Admin on October 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.