300 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்; குடிவரவு குடியகல்வு திணைக்களம்
கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதுடன் இவர்களில் இந்திய மற்றும் பாகிஸ்தானியர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீசா சட்டங்களை மீறி இலங்கையில் தொழில்களில் ஈடுபட்ட பலர் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தேடுதல்களின் மூலம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
300 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்; குடிவரவு குடியகல்வு திணைக்களம்
Reviewed by NEWMANNAR
on
November 17, 2013
Rating:

No comments:
Post a Comment