அண்மைய செய்திகள்

recent
-

தேசிய மரநடுகை தினமும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகரசபை அதிகாரிகளின் அலட்சியபோக்கும்

தேசிய மர  நடுகை  தினத்தில் நாடளாவிய ரீதியில் தேசிய மரநடுகை நிகழ்வு நடைபெற்ற அதேவேளை மன்னார் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகாரசபையினால் தலைமன்னார் வீதியின் இருமருங்கிலும் மரங்கள் நடப்பட்டன என்பது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். இதற்காக பாடசாலையின் மாணவர்கள் மரங்களை நடுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். 

தலைமன்னார் விதியோரத்தின் இருமருங்கிலும் மரக்கன்றுகள் நாட்டப்பட்ட போதிலும் அவை நீண்டகால நோக்கத்தில் நடப்படவில்லை என்பது சுட்டிகாட்டப்பட வேண்டிய விடயமாகும். அதாவது இதனை ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள் இதனை சரியான முறையில் திட்டமிடாமல் செயற்பட்டு நிறைவேற்றாமை மிகவும் மனவருத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

வேலியேபயிரை மேயும் என்பதற்கு இணங்க புகைப்படம் எடுப்பதற்காக வீதியின் மக்கள் நடமாடும் பகுதியில் மட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன், ஏனைய பகுதியில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு எதுவித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் செய்யாமல் விடப்பட்டிருப்பது, அதாவது மாடு, ஆடு மற்றும் கழுதைகள் போன்ற விலங்கினத்திற்கு இந்த மரக்கன்றுகள் இன்று இரவே இரையாகும் என்பது கூட அவரகளுக்கு புரியவில்லை போலும். பொதுவாக மன்னார் நகரில் சன அடர்த்தி அதிகமாக காணப்படுகின்றது ஆனால் மரங்களின் எண்ணிக்கையோ மிகவும் குறைவு இது மன்னார் நகர சூழலை மினவும் பாதிப்பிற்குள்ளாக்குகின்றது.

 நாம் நடுகின்ற ஒவ்வொரு மரக்கன்றுகளும் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினை சீர் செய்யும் என்பதில் எதுவித ஜயமுமில்லை. ஏற்பாட்டாளர்கள் ஏன் இத்தகைய பிற்போக்கு சிந்தனையுடன் செயற்பட்டார்கள் என்பது கேள்விக்குறியாக இருப்பதுடன், பாடசாலை மாணவர்கள் ஏன் இவ்வாறான விழலுக்கு நீரிறைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டாகள் என்பதும் மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான செயற்பாட்டில் வளர்ந்து வரும் மாணவச் செல்வங்களும் ஈபடுத்தப்பட்டமை எதிர்காலத்தில் அவர்களும் இவ்வாறான தவறிழைக்கும் சந்தர்பத்திற்கு வழிவகுக்கும் என்பது சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும். இவ்வாறான மரம் நடும் செயற்றிட்டம் மன்னாருக்கு அத்தியவசியமாக காணப்படுவதினால் மரநடகையினை ஊக்கப்டுத்ததும் செயற்பாட்டினை முழுமையாக செய்வதோடு நேர்த்தியான முறையில் சிந்திக்குமாறு உரிய தரப்பினரினை கேட்டுக் கொள்ளுகின்றோம்.










தேசிய மரநடுகை தினமும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகரசபை அதிகாரிகளின் அலட்சியபோக்கும் Reviewed by NEWMANNAR on November 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.