மீள் குடியமர்ந்துள்ள மன்னார் வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பான மகஜர் மன்னார் அரசஅதிபரிடம் கையளிப்பு
இன்று மாலை 2மணியளவில் மன்னார் நகரசபை உறுப்பினர் நவுசின் தலைமையிலான மன்னார் மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் சார்ந்த அமைப்பு மன்னார் அரசாங்க அதிபரை மன்னார் மாவட்ட செயலகத்தில் சந்தித்து முஸ்லிம் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதன் போது மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் சார்ந்த அமைப்பின் பிரதிநிதி ஆலம் மாஸ்டர்(உப்புக்குளம் ஜும்மா பள்ளிவாசல் தலைவர்) அவர்களினால் குறித்த மகஜர் மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது..
இது தொடர்பாக முன்வைக்கப்பட்ட மகஜரின் விபரம் பின்வருமாறு
அரசாங்க அதிபர்
கச்சேரி
மன்னார்
மீள் குடியமர்ந்துள்ள மன்னார் வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பானது
1990 ம் ஆண்டு மாவட்டத்தின் அணைத்து முஸ்லிம்களும் சில மணி நேர அவகாசத்தில் மாவட்டத்தை விட்டு விரட்டப்பட்டோம். விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தமது உறவுகளைத் தவிர வேறு எதையும் எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லை.
இடம்பெயர்ந்து நாட்டின் பல பாகங்களிளும் வாழ்ந்து வந்த இந்த மக்களை அரசு சில வாக்குறுதிகளை வழங்கி மீள்குடியேற்றம் செய்தது. இதன் போது எமது மக்களால்
1. இம் மக்களுக்கான காணி வழங்குதல்
2. வீட்டு வசதி ஏற்படுத்தி தரல்
3. நஷ்ட ஈடு வழங்குதல்
4. உட்கட்டுமான வசதிகளை செய்து தரல்
5. இங்கு வாழ சகல உரிமைகளையும் பெற்றுத்தரல்
போன்ற விடயங்கள் அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தும் செய்து தரப்படும் என்ற உறுதிப்பாட்டுக்கமைய கனிசமான மக்கள் மீள்குடியமர்ந்தனர். இருந்தும் இவ்வாக்குருதிகள் ஏதும் இம்மக்களுக்கு செய்து கொடுக்கப்படவில்லை இங்கு வாழும் மற்றைய சமூகத்துக்கு அரசஇ அரச சார்பற்ற நிருவனங்கள் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினர் இம்மக்களையே அவர்கள் பாதிக்கப்பட்ட சமூகமாக கருதி தங்கள் நிதிகளையும் வளங்களையும் வாரி வழங்கினர்.
எமது மக்களுக்கு கண்துடைப்புக்காக ஒரு சில திட்டங்களை முன்னெடுத்தனர். எமது மக்களின் வேலைவாய்ப்புக்களிலும் இதனையே பின்பற்றுகின்றனர்.
இம் மாவட்டத்தின் பேசாலைஇ தாழவுபாடுஇ வங்காலைஇ பள்ளிமுனைஇ அரிப்பு போன்ற மீனவ கிராமங்'கள் ஒவ்வொன்றுக்கும் 100 வீடுகளைக் கொண்ட வீட்டு வசதி திட்டங்கள் இக்காலப் பகுதியில் அரச அரசசர்பற்ற நிறுவனங்களால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
எமது மக்களுக்கு இவ்வாரான முழுமையான வீட்டு வசதி திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை.
1990 க்கு பிறகு பல கிராமங்கள் தமிழ் மக்களுக்காக அரச காணிகளில் காடுகள் அழித்து உறுவாக்கப்பட்டு வழங்கப்பட்டன. இவ்வாரான கிராமங்கள் எம்மால் இணங்காட்ட முடியும். ஆனால் எமது மக்களுக்கு அரசியல்த் தலைவர்களாளோ அரச அதிகாரிகளாளோ ஏற்படுத்தித் தரப்படவில்லை. அரச காணி வழங்களிலும் எமது மக்கள் புறக்கனிக்கப்படுகின்றனர்.
எமது மக்களுக்கு எங்காவது அரச காணிகள் வழங்ப்பட்டால் அதனை இல்லாமல் செய்ய பிற சமூக அரசியல் தலைவர்களும் அச்சமூக தலைவர்களும் விமர்சனங்களையும் போரட்டங்களையும் முன்னெடுக்கின்றனர். குறிப்பாக
1. சன்னார்
2. நாணாட்டான்
3. தலைமன்னாh பியர்;
4. தாராபுரம்
5. மூர்வீதி
6. உப்புக்குளம்
7. பொன் தீவு கண்டல்
இவைகளை குறிப்பிடலாம். இவை அனைத்தும் 1990 ற்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த கிராமங்களாகும். தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட கிராமங்கள் எண்ணிலடங்காதது. வீட்டு வசதி திட்டங்களில் கூட கடந்த காலங்களில் எமக்கு அநீதி இழைக்கப்பட்டது. நேர்ப் என்றும் நெகோட்; என்றும் வேல்ட் விசன் என்றும் பல அரச அரசசார்பற்ற நிருவனங்கள் தமிழ் மக்களுக்கு முழுமையாக வீட்டு வசதிகளை முழுமையாக வழங்கின. மேலும் தற்போதும் இந்திய அரசால் வழங்கப்படும் வீட்டு வசதித் திட்டமும் எமது மக்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் மாத்திரம் சில முஸ்லிம் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டன. இருந்தும் ஓரிரு கிராமங்களைத் தவிர ஏனையவர்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தவில்லை குறிப்பாக
1. எருக்கலம்பிட்டி
2. மூர்வீதி
3. தலை மன்னார்
4. அடம்பன்
5. கரிசல்
6. புதுக்குடியிருப்பு
தற்போது இந்திய அரசு திட்டத்தின் இரண்டாம் இ மூன்றாம் கட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இதில் எந்த முஸ்லிம் கிராமமும் உள்ளடங்கவில்லை. இன்னும் எமது மக்களில் பலர் இடம்பெயர்ந்த நிலையில் இங்கு ஏந்த காணிகளோஇ வீட்டு வசதிகளோ அற்ற நிலையில் தாம் பிறந்த மாவட்டத்திற்கு வரமுடியாதுள்ளனர் இவர்களை மீள்குடியேற்றம் செய்வதாயின் இவர்களுக்கான சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டி உள்ளது.
நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தால் தமது கனவனை இழந்தவர்கள்இ அங்கவீனமானவர்கள் இ தொழில் வளங்களை இழந்தோர்இ கைவிடப்பட்டோர்;இ போன்றவர்கள் உள்ளனர். இவர்களின் வாழவாதார உதவிகள் கூட செய்து கொடுக்கப்படவில்லை. இம்மக்கள் இடம்பெயந்து 23 வருடங்கள் கடந்த நிலையில் இம் மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்படாததுஇ எமது மக்கள் இங்கு வாழ்வதற்கான நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது.
மேலும் உப்புக்குள கிராமத்தில் அமைந்துள்ள மீன்பிடி இறங்குத்துறை அரச அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய வழங்கப்பட்டது. இருந்தும் 12 வருடங்கள் கடந்த நிலையில் இது மக்களிடம் கையளிக்கப்படவில்லை இன்னும் இது மாவட்டத்தின் பாரிய சமூக பிரச்சினையாக உள்ளது
எனவே தங்கள் முன் மக்களின் தேவைகள்இ அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இடம்பெயர்ந்து வாழும் எமது மாவட்ட முஸலிம்கள் மீளவும் குடியமர்த்தப்பட வேண்டியதும் அவர்களுக்கு வழங்க வேண்டியதுமான முழுமையான திட்டங்ஙகளை தாங்கள் நிறைவு செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் மன்னார் மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக தங்களிடம் கையளிக்கிறோம்.
நன்றி
மன்னார் மாவட்ட மீள்குடியமர்ந்தோர் நலன் சார்ந்த அமைப்பு
பிரதி: கௌரவ. ஜனாதிபதி செயலாளர் - தகவலுக்காக
கௌரவ. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் - தகவலுக்காக
கௌரவ. மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் - தகவலுக்காக
கௌரவ. மாவட்ட பள்ளிப்பரிபலன சபை தலைவர் ஃ செயலாளா - தகவலுக்காக
மீள் குடியமர்ந்துள்ள மன்னார் வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பான மகஜர் மன்னார் அரசஅதிபரிடம் கையளிப்பு
Reviewed by Author
on
November 15, 2013
Rating:

No comments:
Post a Comment