வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் ஆயருக்கும் இடையிலான விசேட சந்திப்பு -படங்கள்
இன்று மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னார் வந்துள்ள வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் ஆயர் வண.இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று காலை 11 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண அமைச்சர்களான கடற்தொழில் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் வடமாகாண சபை உறுப்பினர்;களான பிறிமுஸ் சிராய்வா குணசீலன் அயூப் அஸ்மின் .குருமுதல்வர் அருட்தந்தை விக்ரர் சோசை மற்றும் மன்னார் மாவட்டத்திலுள்ள பங்குகளைச் சேர்ந்த அருட்தந்தையர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மன்னார் மற்றும் வடமாகாணங்களில் நடைபெற்றுவரும் காணி சுவிகரிப்பு, தென்னிந்திய, தென் இலங்கை மீனவர்களின் மன்னார் வருகையால் ஏற்படும் பாதிப்பு, மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இருக்கும் நம்பிக்கைகளை சிதைக்காமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னால் ஆகக்கூடிய சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுதல். மக்களுக்கு தமது அதிகாரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மற்றும் எதிர் காலங்களில் வடமாகாண சபைக்கு கூடிய அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை தொடர்பில் விரிவாக ஆராய்ந்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது ஆயர், அமைச்சர்கள், வடமாகாண உறுப்பினர்கள் மற்றம் அருட்தந்தையர்கள் மன்னாரில் நடைபெற்றுவரும் பல பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதன் போது குறித்த விடயங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக்கொண்ட முதலமைச்சர் குறித்த விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்து அவற்றை உரிய முறையில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதேவேளை இன்று மாலை 2.30 மணியளவில் மன்னார் மாவட்ட அனைத்து கூட்டுறவுச் சங்கங்களின் அனுசரணையுடன் மாவட்ட கூட்டுறவுச் சபையால் நடத்தப்படும் வரவேற்பு விழாவிலும் பங்கேற்கவுள்ளார்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் மன்னார் ஆயருக்கும் இடையிலான விசேட சந்திப்பு -படங்கள்
Reviewed by Author
on
December 01, 2013
Rating:
No comments:
Post a Comment