மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் முன்னேற்றம் காணாதவிடத்து சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாது: கெமரூன்
உள்நாட்டில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு சுயாதீன விசாரணை குழுவை நிறுவவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளளார். அந்த சுயாதீன குழுவின் ஊடாக எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெருந்தன்மையாக நடந்துகொள்வதன் மூலமாகத்தான் நாட்டில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டார் கேமரன்.
ஜனாதிபதி மஹிந்தவுடனான தனது சந்திப்பில் கடுமையான கருத்துக்கள் பரிமாறபட்டதாகவும் ஆயினும், இந்த சந்திப்பு தேவையானது, பெறுமதியானதுதான் என்றும் அவர் கூறினார்.
' நான் சொன்னது அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் அவர்கள் இந்தப் பிரச்சினைகளில் முன்னேற்றம் காண விரும்புகிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். வெளிப்படையாக சொல்லவேண்டுமென்றால், இந்த விஷயத்தில் சர்வதேச அழுத்தம் இருப்பது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்' என்றும் அவர் தெரிவித்தார்.
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் முன்னேற்றம் காணாதவிடத்து சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாது: கெமரூன்
Reviewed by Author
on
November 16, 2013
Rating:
Reviewed by Author
on
November 16, 2013
Rating:


No comments:
Post a Comment