அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் இராணுவமயப்படுத்தல் தொடர்கிறது! பிபிசி ஊடகம்

இலங்கையில் போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் அங்கு சகல இடங்களும் இராணுவமயப்படுத்தப்பட்டு வருவதாக பி.பி.சி வெளியிட்டுள்ள செய்தி தொகுப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த செய்திக் தொகுப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கையில் சகல இடங்களிலும் இராணுவம் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளது, இலங்கை வாழ் தமிழர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

 போர் முடிந்த பின்னரும் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மேலும் மேலும் இராணுவயமயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை தவிர அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 வர்த்தகம், சுற்றுலா துறை, காய்கறி வர்த்தகம் முதல் சகலவற்றிலும் இராணுவத்தின் பிரசன்னம் இருக்கின்றது. சில குழுக்கள் பௌத்த மதத்தை பயன்படுத்தி வன்முறைகளையும், இனவாதத்தையும் தூண்டி வருகின்றன. எனினும் இதனை அரசாங்கம் கண்டிப்பதில்லை என்பதால் அதன் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் முடிவடைந்த பின்னரும் இராணுவமயப்படுத்தல் தொடர்கிறது! பிபிசி ஊடகம் Reviewed by NEWMANNAR on November 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.