அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தில் பாதித்தோருக்கு நஷ்டஈடு

கடந்தகால யுத்தப் பாதிப்புக்கு உள்ளான 336 பேருக்கு  நஷ்டஈடுகள் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன. 

1990ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இழப்புகளுக்கான நஷ்டஈட்டுக்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து விண்ணப்பித்த 336 பேருக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டன. 

மேலும் வடமாகாணத்தில் யுத்தத்தினால் சேதமடைந்த பௌத்த விகாரைகள், இந்துக் கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் இதன்போது நிதியுதவி வழங்கப்பட்டது.

இதன்போது மொத்தமாக 28 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சும் புனர்வாழ்வு அதிகாரசபையும் இணைந்து நஷ்டஈடுகள் வழங்குவதற்கான நிகழ்வை ஏற்பாடு செய்தது.  

வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன், புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் சந்திரசிறி முத்துக்குமார, வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர உள்ளிட்ட பலர் கலந்துகொண்
யுத்தத்தில் பாதித்தோருக்கு நஷ்டஈடு Reviewed by Author on November 19, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.