மன்னர் விம்பம் பகுதியில் 36 கோடி ரூபா செலவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் தேவஸ்தானம் புனரமைப்பு பற்றிய தகவல்கள்.படங்கள் இணைப்பு
இந்துக்களால் போற்றப்படும் நவக்கிரகங்களில் ஒருவரான கேது பகவான் தனது வினைகளை போக்க ஈழ நாட்டின் வட பகுதியிலுள்ளதும் திருக்கயிலைச்சிகரம் வந்து விழுந்த இடமுமான தென்கைலாயம் என போற்றப்பட்ட தலத்திற்கு வந்து வணங்கினர் எனவும் அதனால் மகிழ்ந்த இறைவன் அவருக்கு காட்சி தந்து நீ எம்மை வணங்கியதால் எம்மை கேதீச்சரநாதர் என்று யாம் உறையும் இவ்விடம் கேதீச்சரம் என்று பெயர் பெறும் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது என கூறப்படும் சிறப்புமிக்க தேவஸ்தானம் மன்னார் திருக்கேதீச்சரமாகும்.
இதேபோன்று கி.மு 3ம் நுற்றாண்டின் இத்தலம் மகாதீர்த்தம் என அழைக்கப்பட்டதாக கதிர்காம கல்வெட்டு ஒன்றின் மூலம் அறியமுடிவதாக கூறப்படுகின்றது.
இத்தனை சிறப்பு மிக்க திருத்தலம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. திருத்தலத்திற்கு தேவையான அபிவிருத்தி வேலைகளை கடந்தகாலங்களில் கணிசமான அளவு அரசாங்கம் செய்து முடித்துள்ளது. கோவிலின் உட்புறம்,வெளிப்புறம்,பாலாவி நீர்த்தடாகம் உள்ளிட்ட பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இதற்கென பல இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
எனினும் கோவிலை நவீனமுறையில் அழகுற அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கோயில் நவீனமுறையில் இந்திய பிரசித்திபெற்ற இந்துகோயில்களை போன்று அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுவருகின்றது.
இதற்கென இந்தியா மாமல்லபுரத்திலிருந்து ஒருதொகுதி கருங்கற் சிற்பத்தூண்கள் வருவிக்கப்பட்டுள்ளது.
மிக விரைவில் இதற்கான அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்படவள்ளது.
இதற்கென 36 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது. இது அமைக்கப்படுமிடத்து திருக்கேதீச்சர தேவஸ்தானம் பல சிறப்புகளை பெறும் கோயிலாக திகழும் .
மன்னர் விம்பம் பகுதியில் 36 கோடி ரூபா செலவில் மன்னார் திருக்கேதீஸ்வரம் தேவஸ்தானம் புனரமைப்பு பற்றிய தகவல்கள்.படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
December 01, 2013
Rating:
No comments:
Post a Comment