முன்னோக்கி நகர்வோம்- அடைவுகள் வெகுதூரத்தில் இல்லை.அயூப் அஸ்மின்
1.12.2013 அன்று மன்னார் மாவட்ட கூட்டுறவாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு நிகழ்வில் அயூப் அஸ்மின் வழங்கிய கருத்துரை
அன்பிற்குரிய மன்னார் மாவட்ட மக்களே!
அன்பிற்குரிய மன்னார் மாவட்ட மக்களே!
நடந்துமுடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் தாங்கள் இரண்டு சாதனைகளை நிலை நாட்டியிருக்கின்றீர்கள் முதலாவது வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் 74.22 வீத அதியுச்ச வாக்களிப்பை தந்ததன்மூலம் மாகாணத்தின் முதன்மை வாக்களிப்பு மாவட்டம் என மன்னாரை மாற்றியிருக்கின்றீர்கள்.
அடுத்து தமிழ்-முஸ்லிம் சமூகங்களின் நல்லுறவின் அடையாளமாக நான் மன்னாரில் களமிறங்கியபோது எவ்வித மறுப்பும் இன்றி முழுமையான ஆதரவை நல்கினீர்கள், இதன்மூலம் வடக்கின் சமூக நல்லிணக்கத்தை முன்மாதரியான செயற்பாட்டின் மூலம் உறுதிசெய்திருக்கின்றீர்கள். எனவே இவ்விரண்டிற்காகவும் இவ்விடத்தில் உங்களுக்கு நான் நன்றி கூறிக்கொள்கின்றேன்
மன்னாரில் அபிவிருத்தி சார்ந்து சிந்திக்கவேண்டிய, திட்டமிடவேண்டிய செயற்படுத்தவேண்டிய அதீத தேவை எமக்கு முன்னால் இருக்கின்றது.
அதே போன்று மன்னாரில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், இந்துக்களும் சமபலம் பொருந்திய சமூகங்களாக இருக்கின்றோம். இந்த மூன்று சமூகங்களும் தங்களிடையே ஐக்கியத்தை, ஒற்றுமையினைக் கட்டியெழுப்புகின்றபோது எமக்கு முன்னால் இருக்கின்ற எல்லாப் பிரச்சினைகளும் தானாகத் தீர்ந்துவிடும் என்பது எனது நம்பிக்கை. முன்னோக்கி நகர்வோம்- அடைவுகள் வெகுதூரத்தில் இல்லை.
முன்னோக்கி நகர்வோம்- அடைவுகள் வெகுதூரத்தில் இல்லை.அயூப் அஸ்மின்
Reviewed by NEWMANNAR
on
December 02, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 02, 2013
Rating:


No comments:
Post a Comment