பெரும் போக விவசாய செய்கையில் மன்னாரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வு - படங்கள்
மன்னார் மாவட்டத்தில் பெரும் போக விவசாய செய்கையினை மேற்கொண்டு வரும் விவசாயிகள் எதிர் நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் உயிலங்குளம் ம.வி பாடசாலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது மாந்தை மேற்குஇமடுஇநானாட்டான்இமுசலி அகிய பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் பெரும் போக விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவிக்கையில்இஇஇஇஇ
தற்போதுது மன்னார் மாவட்டத்தில் மழை பெய்யாததன் காரணத்தினால் பெரும் போக விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு நீர் இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
கட்டுக்கரை குளத்தை நம்பி தற்போது 4 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பெரும் போக நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.சுமார் இரண்டு மாதங்களை கடந்த பயிராக அப்பயிர்கள் காணப்படுகின்றது.
-தற்போது நெற்பயிருக்கு உரிய நீர் இல்லாமையினால் ஆயிரம் ஏக்கர் வரை நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளது.
தற்போது எஞ்சியுள்ள பயிர்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுக்கரை குளம் இது வரை திறந்து விடாததின் காரணத்தினாலேயே இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.எதிர் வரும் மாதம் நெற்கதிர் வருகின்ற காலம் என்பதினால் உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது மட்டுமின்றி அப்பகுதிகளில் கால்நடைகளினால் விவசாயிகள் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே விவசாய பயிர்ச் செய்கையை பாதீப்படையச் செய்கின்ற வகையிலும்இபயிர்களை உண்ணும் வகையிலும் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
எனவே இவ்விடையம் தொடர்பில் உரிய அதிகாரி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் போர்து கருத்துத்தெரிவித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியஇஇஇஇஇ
-விவசாhயிகள் எதிர் நோக்குகின்ற இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.பாதீக்கப்பட்ட விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.அது மட்டுமின்றி எதிர்வரும் 5 ஆம் திகதி கட்டுக்கரை குளம் திறந்து விடப்பட்டு விவசாய செய்கைகளுக்கு நீர் சென்றடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
திறந்து விடப்படுகின்ற நீர் தேவையற்ற விதத்தில் பயண்படுத்திக்கொள்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
-குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல்இஉதவி மாவட்ட செயலாளர் எம்.பரமதாஸ்இகமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர் தேவ ரதன்இபிரதேச நீர்பாசன பொறியியலாளர் எம்.மயூரன்இநீர்பாசன திணைக்கள திட்ட முகாமையாளர் கிரிஸ்ன ரூபன் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரும் போக விவசாய செய்கையில் மன்னாரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வு - படங்கள்
Reviewed by Author
on
December 30, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment