இலங்கைக்கு 10 வருடங்களுக்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகை
இலங்கைக்கு இந்த மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையின் பலன்கள் கிடைக்கும் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியூதீன் தெரிவித்தார்.
ஜனவரி முதலாம் திகதி முதல் அடுத்த 10 வருடங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த வரிச் சலுகை இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
ஜீ.எஸ்.பி வரிச் சலுகையின் புதிய திட்டத்திற்கு அமைய சிறிய மற்றும் நடுதர கைத்தொழில் உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் பயனடைய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம் உலகில் மிகப் பெரிய வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை கொண்டுள்ள பிராந்தியமாகும். 80 குறையாத நாடுகள் இலங்கையின் வர்த்தக பங்களிகளாக உள்ளன.
இதில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக இருப்பதுடன், இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு தெளிவான சந்தையாக திகழ்கிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு 10 வருடங்களுக்கு ஜீ.எஸ்.பி வரிச் சலுகை
Reviewed by NEWMANNAR
on
January 02, 2014
Rating:

No comments:
Post a Comment