மன்னார் வேப்பங்குளம் மன்.இக்ரஃ அ.மு.க ஆரம்ப பாடசாலை திறந்து வைப்பு
முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளத்தில் அமைந்துள்ள பிச்சைவாணிப நெடுங்குளம் மன்.இக்ரஃ அ.மு.க பாடசாலைலையிற்கான தரம் ஒன்றில் இருந்து ஜந்துவரையான பாடசாலை கட்டிடம் ஒன்று இன்று காலை வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதின் வைபவரீதியாக மன்.இக்ரஃ அ.மு.க பாடசாலைலையினை திறந்துவைத்தார்.
இப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற் கொள்வதில் பல அசௌவுகரியங்கள் காணப்பட்டது.
குறித்த பகுதியில் பாடசாலைகள் இல்லாத நிலை காணப்பட்டது. இன்நிலையில் குறித்த பகுதிமக்கள் குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் றிசாட் பதியுதினின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
இன்நிலையில் குறித்த பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்றை அமைத்து கொடு;ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் இன்று காலை குறித்த பாடசாலை கட்டிடத்தை வைபவரீதியாக வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதின் திறந்துவைத்தார்.
இதற்கென 1.8 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. அதேவேளை குறித்த பாடசாலைக்கென ஜந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான நியமன கடிதங்களை வட மாகாண உறுப்பினர் றிப்கான் பதியூதீன இன்று வழங்கிவைத்தார்.
இன் நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி பிரதி பணிப்பாளர் எம்.என்.முனபர், முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.எம்.எகியா ,மன்னார் வலய கல்வி திட்டமிடல் பிரதி பணிப்பாளர் லியோன் றெவல் , முசலி பிரதேச சபையின் உப தலைவர் எஸ்.எம். பைறுஸ், அரசியல் பிரமுகர்கள் , பாடசாலை மாணவர்கள்,அரச உயர் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
மன்னார் வேப்பங்குளம் மன்.இக்ரஃ அ.மு.க ஆரம்ப பாடசாலை திறந்து வைப்பு
Reviewed by Author
on
January 02, 2014
Rating:
No comments:
Post a Comment