மன்னாரில் விசேட தேவை உடையவர்களுக்கு சுய தொழில் பயிற்சிகள் ஆரம்பித்து வைப்பு
சமூக சேவைகள் அமைச்சு உலக வங்கியின் நிதியுதவியுடன் 'திரிசெவிய' வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் மற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச் சங்கத்தில் உள்ள மற்றுத் திறனாளிகளுக்கான சுய தொழில் பயிற்சியினை சனிக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச் சங்கத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அச்சங்கம் தொழில் பயிற்சிகளை நடாத்தி வந்த நிலையில் சமூக சேவைகள் அமைச்சு உலக வங்கியின் நிதி உதவியுடன் 'திரிசெவிய' திட்டத்தின் கீழ் மெழுகு திரி தயாரித்தல் மற்றும் ஊதுபத்தி தயாரித்தல் போன்ற இரு சுய தொழில் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளது.ஆரம்ப நிகழ்வு \சனிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச் சங்கத்தில் இடம் பெற்றது.
இதன் போது கௌரவ விருந்தினராக சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எமில்டா சுகுமார் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக அங்கவீனமுற்றோருக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் சரத் ரவீந்திர, உதவி மாவட்டச் செயலாளர் எம்.பரமதாஸ், நானாட்டான் பிரதேசச் செயலாளர் சி.ஏ.சந்திரையா, சமூக சேவைகள் அமைச்சின் பணிப்பாளர் எம்.ராமமூர்த்தி, சமூக சேவைகள் அமைச்சின் சமூக சேவை அலுவலகர் பி.கிரிஸ்னகுமார், மன்னார் மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முகாமையாளர் ஜே.எம்.ஏ.லெம்பேட் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த இரு தொழிற்பயிற்சிகளையும் ஆரம்பித்து வைத்தனர்.
குறித்த தொழிற்பயிற்சிகள் சுமார் 6 மாதம் கொண்டதாக காணப்படுவதோடு ஒவ்வொறு தொழிற்பயிற்சிக்கும் 20 பேர் வீதம் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் போது மன்னார் மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வுச்சங்கத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தயாரித்த சுயதொழில் பொருட்களையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.இதன் போது கருத்துத்தெரிவித்த சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் எமில்டா சுகுமார்,,,,,
'உலக வங்கியினால் வழங்கப்பட்ட சுமார் 30 இலட்சம் ரூபாய் நிதியுதவியுடன் 9 மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுய தொழில் பயிற்சியினை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.இதன் அடிப்படையில் முதல் முதலாக மன்னாரில் இந்த சுய தொழில் பயிற்சியினை ஆரம்பிக்கின்றோம்.இந்த பயிற்சியின் மூலம் விசேட தேவையுடையவர்கள் தன்னம்பிக்கையிடன் தமது எதிர்கால தேவையை பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்' என தெரிவித்தார்.
மன்னாரில் விசேட தேவை உடையவர்களுக்கு சுய தொழில் பயிற்சிகள் ஆரம்பித்து வைப்பு
Reviewed by Admin
on
January 12, 2014
Rating:
Reviewed by Admin
on
January 12, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment