கைதிகளின் சம்பளம் அதிகரிப்பு
கைதிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் அதிகரிப்பதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளொன்றுக்கு ஒரு ரூபா சம்பளம் பெறும் கைதிக்கு 60 ரூபாவும், 1 ரூபாய் 50 சதம் பெறும் கைதிக்கு 75 ரூபாவும், 2 ரூபாய் 50 சதம் பெறும் கைதிக்கு 100 ரூபாவும் வழங்கப்படும் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திராரத்ன பல்லேகம தெரிவித்தார்.
தச்சன், மேசன், பேக்கரி, அச்சு இயந்திரம் மற்றும் சவர்க்கார உற்பத்தி ஆகிய தொழில்களில் ஈடுபடுகின்றவர்களுக்கே சம்பளம் வழங்கப்படுகின்றது. அவ்வாறானவர்கள் நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
கைதிகளின் சம்பளம் அதிகரிப்பு
Reviewed by Admin
on
January 05, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment